ETV Bharat / state

ரூ.11 கோடி மதிப்பில் ‘நீடித்த நிலையான பருத்தி இயக்கம்' - ஸ்டாலின் தொடங்கிவைப்பு - cotton farmers

பருத்தி விவசாயிகளின் நலனுக்காக ரூ.11 கோடி மதிப்பீட்டில் 'நீடித்த நிலையான பருத்தி இயக்கம்' என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

ரூ11 கோடி மதிப்பில் ‘நீடித்த நிலையான பருத்தி இயக்கம்’ : முதலமைச்சர் ஸ்டாலின் தொடக்கம்

author img

By

Published : Jan 8, 2022, 9:33 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் ‘வெள்ளைத் தங்கம்’ என்று அழைக்கப்படும் பருத்திப் பயிரானது, சராசரியாக 1.62 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு, ஒரு ஹெக்டேருக்கு 411 கிலோ உற்பத்தித் திறனுடன் 3.92 லட்சம் பொதிகள் உற்பத்திசெய்யப்படுகின்றன. தமிழ்நாட்டில் சுமார் 2000 நூற்பாலைகள் இயங்குவதால், நாட்டின் பருத்தி நூற்புத்திறனில் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு விளங்குகிறது.

நீடித்த நிலையான பருத்தி இயக்கம்

உயர்தரப் பருத்தி உற்பத்தித் திறன் மற்றும் உற்பத்தியை அதிகரிக்கவும், பருத்தி நூற்பாலைகளின் பெருகிவரும் தேவைகளைப் பூர்த்திசெய்யவும் தமிழ்நாடு அரசு பல்வேறு சீரிய முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.

அவற்றில் மேலும் ஒரு சிறப்பம்சமாக, பருத்தி விவசாயிகளின் நலன்கருதி, ரூ.11 கோடி மதிப்பில் நீண்ட இழை பருத்தி சாகுபடி, ஒருங்கிணைந்த உத்திகளை 25,000 ஹெக்டேர் பரப்பளவில் செயல்படுத்திட நீடித்த நிலையான பருத்தி இயக்கம் என்ற புதிய திட்டத்தை மு.க. ஸ்டாலின் இன்று (ஜனவரி 8) தலைமைச் செயலகத்தில், ஐந்து விவசாயிகளுக்கு இடுபொருள்களை வழங்கி தொடங்கிவைத்தார்.

பருத்தி விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை

இத்திட்டத்தின்கீழ், நீண்ட, மிக நீண்ட இழை பருத்தி ரகங்களான எஸ்.வி.பி.ஆர்-5, எஸ்.வி.பி.ஆர்-6, கோ-14, சுரபி, சூரஜ், கோ-17 விதை உற்பத்திசெய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையாக ஒரு கிலோ விதைக்கு ரூ.60 வீதமும், சான்று பெற்ற பருத்தி விதைகள் விநியோகத்தின்கீழ் கிலோவிற்கு ரூ.130 வீதம், ஹெக்டேருக்கு ரூ.1,300, பருத்தியில் ஊடுபயிர் சாகுபடி செய்திடப் பயறு விதைகள் ஒரு ஹெக்டேருக்கு ரூ.500, பருத்தி நுண்ணுரங்கள், திரவ உயிர் உரங்கள் ஒரு ஹெக்டேருக்கு ரூ.950, ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மைக்கான இடுபொருள்கள் ஒரு ஹெக்டேருக்கு ரூ.6,500, விசை களைக்கருவி ஒன்றிற்கு ரூ.47,000, தண்டு கூன் வண்டுகளைக் கட்டுப்படுத்த வேப்பம் புண்ணாக்கு இடுவதற்கு ஹெக்டேர் ஒன்றிற்கு ரூ.5,000 வீதம் மானியத்தில் பருத்தி விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம்.

ஆதி திராவிட விவசாயிகளுக்கு முன்னுரிமை

இத்திட்டத்தில் விருப்பமுள்ள சிறு, குறு விவசாயிகள், பெண் விவசாயிகள், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இத்திட்டத்தினால் நடப்பாண்டில் தமிழ்நாட்டின் பருத்திச் சாகுபடியினை 1.70 லட்சம் ஹெக்டேராக உயர்த்தவும், பருத்தி மகசூலை ஒரு ஹெக்டேருக்கு 380 கிலோவிலிருந்து 430 கிலோ என்ற அளவிற்கு பஞ்சு மகசூலை உயர்த்தி, உற்பத்தியினை 4.30 லட்சம் பொதிகளாக உயர்த்தவும் வழிவகைசெய்யப்படும்.

இந்த நிகழ்ச்சியில், வேளாண்மை-உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தலைமைச் செயலர் வெ. இறையன்பு, கூடுதல் தலைமைச் செயலர் / சர்க்கரைத் துறை ஆணையர் ஹர்மந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: நீட் தேர்வுக்கு எதிராகச் சட்டப் போராட்டம் - அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.