தேர்தல் நடத்தை விதிகளின்படி ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகள் பணியாற்றிய காவலர்களை பணியிட மாற்றம் செய்யக்கோரியும், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படக்கூடிய காவலர்களை பணியிட மாற்றம் செய்யக்கோரியும் எதிர்க்கட்சியினர் தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் முன்னதாக புகார் மனு வழங்கப்பட்டிருந்தது. இதன் தொடர்ச்சியாக ஏற்கனவே சென்னை முழுவதும் 221 காவல் ஆய்வாளர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், தற்போது மிக முக்கிய பொறுப்பில் உள்ள 11 ஏடிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். இதன்படி முக்கிய அரசியல் வழக்குகளைக் கையாண்டு வந்த சென்னை சைபர் கிரைம் பிரிவின் கூடுதல் துணை ஆணையர் சரவணகுமார், கடலூர் மாவட்ட தலைமையிட ஏடிஎஸ்பியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்ட தலைமையிட ஏடிஎஸ்பி பாண்டியன், சென்னை சைபர் கிரைம் கூடுதல் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை வடக்கு மண்டல பெண்கள், குழந்தைகள் குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் துணை ஆணையர் கெங்கை ராஜ், செங்கல்பட்டு ஏடிஎஸ்பியாகவும், பெண்கள், குழந்தைகள் குற்ற தடுப்பு பிரிவு சென்னை தெற்கு மண்டல கூடுதல் துணை ஆணையர் கோவிந்த் ராஜூ விழுப்புரம் சைபர் கிரைம் விங்க்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதே போல் மேகலினா ஆவடி பயிற்சி மைய ஏடிஎஸ்பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'இலங்கை தமிழர்களுக்கு துரோகம் இழைத்த மோடி அரசாங்கம்'- கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்