இது தொடர்பாக வேலைவாய்ப்புத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன. இதையடுத்து, மாணவர்கள் தாங்கள் படித்த அந்தந்த பள்ளிகளிலேயே தங்களது கல்வித் தகுதியை, வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
மாணவர்கள் அனைவரும் இன்று (அக் 23) முதல் நவம்பர் 6ஆம் தேதி வரை இந்த நடைமுறையினை பயன்படுத்திக்கொள்ளலம். புதிதாக வேலைவாய்ப்பு மைய இணையதளத்தில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவை செய்ய விரும்புவோர், https://tnvelaivaaippu.gov.in/Empower/ என்ற இணையதள முகவரியில், தங்களது சுயவிவரங்களைக் குறிப்பிட்டு பதிவு செய்துகொள்ளலாம்.
இந்த பதிவிற்கு மாணவர்கள் தங்களது ஆதார், குடும்ப அட்டை, சாதிச் சான்று, மதிப்பெண் சான்று, அழைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை கொண்டிருப்பது அவசியம் எனக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், வேலைவாய்ப்பு பதிவை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தவறாமல் புதுப்பித்து வர வேண்டும்” என குறிப்பிட்டுள்ளது.