ETV Bharat / state

10th, 11th பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது! - 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவு

10 வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கும், 11 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதியம் 2 மணிக்கும் வெளியிடப்பட உள்ளது.

10th, 11th பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது!

author img

By

Published : May 19, 2023, 7:42 AM IST

சென்னை: தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் 11ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு 2022-23 ம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு மார்ச் 14-ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 5-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 7 லட்சத்து 88 ஆயிரத்து 64 பேர் எழுத விண்ணப்பித்தனர்.

இவர்களில் தமிழ்நாட்டு பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 60 ஆயிரத்து 908 மாணவர்கள், 4 லட்சத்து 12 ஆயிரத்து 779 மாணவிகள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என 7 லட்சத்து 73 ஆயிரத்து 688 பேர் எழுத அனுமதிக்கப்பட்டனர். தமிழ்நாட்டில் 3,224 மையங்களில் தேர்வினை எழுதினர்.
புதுச்சேரி பள்ளிகளில் படித்த 6 ஆயிரத்து 799 மாணவர்கள், 7,577 மாணவிகள் என 14 ஆயிரத்து 376 பேர் 40 தேர்வு மையங்களில் தேர்வினை எழுதினர். தனித்தேர்வர்களாக 2 ஆயிரத்து356 மாணவர்களும், 2 ஆயிரத்து 979 மாணவிகளும், 3 மூன்றாம் பாலினத்தவர்களும் என 5 ஆயிரத்து 338பேர் 135 மையங்களில் எழுதினர்.

தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 2022-23 ம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு ஏப்ரல் 6-ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 20-ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 9 லட்சத்து 38 ஆயிரத்து 291 பேர் எழுத அனுமதிக்கப்பட்டனர். தமிழ்நாட்டில் உள்ள 12,352 பள்ளிகளில் படித்த 4 லட்சத்து 66 ஆயிரத்து 765 மாணவர்கள், 4 லட்சத்து 55 ஆயிரத்து 960 மாணவிகள் தமிழ்நாட்டில் 3,976 மையங்களில் தேர்வினை எழுதினர்.

புதுச்சேரியில் உள்ள 287 பள்ளிகளில் படித்த 7 ஆயிரத்து 911 மாணவர்கள், 7655 மாணவிகள் என 15 ஆயிரத்து 566 பேர் 49 தேர்வு மையங்களில் எழுதினர். தனித்தேர்வர்களாக 26 ஆயிரத்து 352 மாணவர்களும், 14 ஆயிரத்து 441 மாணவிகளும், 5 மூன்றாம் பாலினத்தவர்களும் என 37 ஆயிரத்து 798 பேர் 182 மையங்களில் எழுதினர்.

இவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்து தேர்வு முடிவுகள் தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில் அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “2022-2023ம் ஆண்டில் 10 மற்றும் 11 ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 19 ந் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று (மே 19) காலை 10 மணிக்கும், 11 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று மதியம் 2 மணிக்கும் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.

அரசுத் தேர்வுத்துறையின் இணையதளத்தில் மாணவர்கள் தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்துக் கொள்ளலாம். மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்துக் கொள்ளலாம்.

பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்பித்த செல்போன் எண்ணிற்கும், தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய செல்போன் எண்ணிற்கும் எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்” என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கும் வரை மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.