தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் ரூ.24 கோடியே 77 லட்சத்து 54 ஆயிரம் மதிப்பில் 108 புதிய ஆம்புலன்ஸ் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் 500 அவசர கால ஊர்திகள் சேவை தொடங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருந்தார். முதற்கட்டமாக கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி 20 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பில் 90 அவசரகால ஊர்தியை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் இரண்டாம் கட்டமாக 108 புதிய ஆம்புலன்ஸ் சேவையை முதலமைச்சர் பழனிசாமி இன்று(நவ-12) கொடியசைத்து தொடங்கி வைத்தார். வரும் நாட்களில் மீதமுள்ள அவசர கால ஊர்திகளையும் தொடங்கி வைக்கக்கப்படவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, அன்பழகன், தலைமைச் செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.