ETV Bharat / state

தமிழ்நாட்டில் ஒரே ஆண்டில் 102 டன் போதை பொருள்கள் பறிமுதல் - அமைச்சர் சுப்பிரமணியன் தகவல் - World Tobacco Day

தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில் 102 டன் போதை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

குட்கா
குட்கா
author img

By

Published : May 29, 2022, 10:57 PM IST

சென்னை: பெசன்ட் நகரில் பிரம்மகுமாரிகள் சமாஜம் மற்றும் ரேலா மருத்துவமனை ஊழியர்களின் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நடை பயணத்தை அமைச்சர் சுப்பிரமணியன், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.

போதை ஒழிப்பு விழிப்புணர்வு நடைப்பயணம்

2013-21 வரை 799 டன் போதை பொருள் பறிமுதல்: 1987ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் தேதி முதல் உலக புகையிலை விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படும் நிலையில் , தமிழ்நாட்டில் 2013 ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் தேதி போதைப் பொருட்களான குட்கா, பான்பராக், பான்மசாலா ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சுப்பிரமணியன் 2013ம் ஆண்டு மே 23ஆம் தேதி தொடங்கி கடந்த ஆண்டு மே 23 வரை ஒன்பது ஆண்டுகளில் 799.81 டன் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக கூறினார்.

ஒரே ஆண்டில் 102 டன் போதை பொருள் பறிமுதல்: கடந்த ஆண்டு மே மாதம் 7 ந் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்ற பிறகு போதைப் பொருட்களை ஒழிக்க மருத்துவத்துறை, உள்ளாட்சி அமைப்புகள், காவல்துறை, வியாபாரிகள் சங்க நிர்வாகிகளோடு ஒரு கூட்டத்தை நடத்தி மாநிலம் முழுவதும் போதைப்பொருள்களை விற்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் இதுவரை 102 டன் போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது என்றார்.

அவற்றின் மதிப்பு ரூபாய் 6 கோடியே 80 லட்சம் ரூபாய் எனவும் போதைப் பொருள்கள் விற்றது தொடர்பாக 3063 கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் விடுக்கப்பட்டு; 21 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது எனவும் கூறினார்

இதையும் படிங்க: குட்கா, பான் மசாலா விற்பனை செய்ய மேலும் ஓராண்டு தடை: தமிழ்நாடு அரசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.