ETV Bharat / state

இன்புளுயன்சா காய்ச்சல்.. 10 ஆயிரம் பேருக்கு இலவசமாக தடுப்பூசி. அமைச்சர் மா. சுப்பிரமணியன்.. - Influenza

தமிழ்நாடு அரசு சார்பில் இன்புளுயன்சா பாதிப்பு காரணமாக 10 ஆயிரம் பேருக்கு இலவசமாக தடுப்பூசிகள் போடப்பட உள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மா. சுப்பிரமணியன்
அமைச்சர் மா. சுப்பிரமணியன்
author img

By

Published : Mar 25, 2023, 5:20 PM IST

சென்னை சைதாப்பேட்டை தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் திடீர் நகர், கோதாமேடு பகுதி அளவிலான கூட்டமைப்பு இணைந்து நடத்தும் மகளிர் தின விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர், "குடிசைப்பகுதிகளில் இருக்கும் மகளிர் வாழ்வாதரத்திற்கு சிரமப்பட்டு வந்தனர். 1986ஆம் ஆண்டு கலைஞர் மகளிர் சுய உதவி குழுக்கள் தொடங்கப்பட்டது. இதன் மூலம் பல நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. தமிழ்நாடு முதலமைச்சர் நிதி நிலை அறிக்கையில் ஏராளமான திட்டங்களை மகளிருக்கு அறிவித்து உள்ளார். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் தொகை அதிகரிக்கப்பட்டு உள்ளது. மகளிர் சுய உதவிக் குழுக்கள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளன.

தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் H3N2 என்னும் இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சல் பரவி உள்ளது. முதல் முறையாக வைரஸ் காய்ச்சலுக்கு சிறப்பு காய்ச்சல் முகாம் 1,586 இடங்களில் ஒரே நாளில் நடத்தப்பட்டது. 10 ஆம் தேதியில் இருந்து நேற்று வரை 33,544 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளன. அதன் மூலம் 14 லட்சத்து 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பயனடைந்து உள்ளனர்.

மேலும், 4,308 மருத்துவர், செவிலியர் , மருத்துவம் சார்ந்த காலிப் பணியிடங்களை எம்ஆர்பி மூலம் நிரப்பப்படும் என்று கடந்த நிதி நிலை அறிக்கையில் சொல்லப்பட்டது. அதேபோல் தேர்வு செய்யப்பட்டு பணி ஆணைகள் தொடர்ந்து தரப்பட்டு வருகிறது. 1,021 மருத்துவ பணியாளர்கள் தேர்வு குறித்து போடப்பட்டு இருந்த வழக்கு முடிவடைந்துள்ள நிலையில், 1,021 மருத்துவர்களையும் நியமிக்கும் பணி நடைபெற தொடங்கி உள்ளது.

25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் விண்ணப்பித்து உள்ளனர், இதற்கு ஏப்ரல் 24 ஆம் தேதி தேர்வு நடக்க உள்ளது. அதே போல 986 மருந்தாளர் பணிக்கான தேர்வு ஏப்ரல் மாதம் 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் நடக்க உள்ளது என்றார். கடந்த இரண்டு வருடங்களாக கரோனா பாதிப்பு அதிகம் இருந்தது, பின் படிப்படியாக குறைந்தது ,சில நாட்கள் ஒற்றை இலக்க பாதிப்பாக இருந்தது.

இப்போது XBB BA4 எனப்படும் உருமாறிய ஒமைகிரான் பாதிப்பு பரவிவருகிறது. இந்தியாவில் 1,500 மேல் பாதிப்பு கடந்துள்ளது. இதனை மிக தீவிரமாக கண்காணித்து வருகிறோம். எங்கும் ஒரே பகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு இல்லை, தனி தனியே தான் பாதிப்பு உள்ளது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு 2% பேருக்கு தோராயமாக ஆர்டிபிசிஆர் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பு பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தவில்லை, மருத்துவமனைகளில் சேர்க்கும் அளவுக்கு கூட பாதிப்பு இல்லை.

நேற்று தமிழ்நாட்டில் 86 பேர் இதற்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்புளுயன்சா காய்ச்சல் தமிழகத்தை பொறுத்தவரை பூஜ்ஜியம் என்ற அளவை எட்டி வருகிறது. முதல் முறையாக தமிழக அரசு சார்பில் இன்புளுயன்சா பாதிப்புக்கு வரும் நாட்களில் சுகாதாரப் பணியாளர்கள் மூலம் 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் இலவசமாக போடப்படும். இந்தியாவிலேயே முதல் முறையாக அரசு தரப்பில் இன்புளுயன்ஸா தடுப்பூசி போடப்படுகிறது. விரும்புபவர்கள் தனியார் மருத்துவமனையில் கூட இன்புளுயன்சா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்" என தெரிவித்தார்

இதையும் படிங்க: கடந்த ஆட்சியை விமர்சிக்காமல் பொதுமக்களுக்கு திட்டங்களை நிறைவேற்றுங்கள் - முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.