ETV Bharat / state

முகக் கவசம் அணியாமல் வந்தவர்கள் மீது 3 நாட்களில் 10,000 வழக்குகள்

சென்னை: முகக் கவசம் அணியாமல் வந்தவர்கள் மீது கடந்த மூன்று நாள்களில் மட்டும் 10,000 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

commissioner-ak-viswanathan
commissioner-ak-viswanathan
author img

By

Published : May 24, 2020, 3:10 PM IST

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களுக்காக, கிருமி நாசினி இயந்திர பயன்பாட்டை சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். அதன்பின் அவர், காவலர்களுக்கு கபசுரக் குடிநீர், கிருமி நாசினிகள், முகக் கவசங்கள் உள்ளிட்டவை வழங்கினார்.

அதையடுத்து செய்தியாளர்களிடம் அவர், "சென்னை காவல்துறைக்காக கிருமி நாசினிகளை தொடாமல் கைகழுவுமாறு வடிவமைக்கப்பட்ட இயந்திரத்தை சட்டக் கல்லூரி மாணவர் நிகுல் ஆனந்த், எம்.ஒ.பி வைஷ்ணவா கல்லூரி ரக்ஷனா சுரேஷ் பிரபு ஆகியோர் தங்களின் சொந்தச் செலவில் வாங்கிக் கொடுத்துள்ளனர்.

இந்த இயந்திரத்தின் மூலம் பாதுகாப்பான முறையில் கைகளை கழுவலாம் எனத் தெரிவித்தார். அதையடுத்து அவர், ஊரடங்கு காலகட்டத்தில் வழக்கத்தை விட குற்றச் செயல்கள் 50 விழுக்காடு குறைந்துள்ளது. ஆனால் முகக் கவசம், ஊரடங்கை மீறுதல் அதிமாகி வருகிறது. அதன்படி, சென்னையில் முகக் கவசம் அணியாமல் வந்தவர்கள் மீது கடந்த மூன்று நாள்களில் மட்டும் 10,000 வழக்குகள் பதிவாகியுள்ளன எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்தல்: காவல் ஆணையர் விஸ்வநாதன் ஆய்வு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.