சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் ரிலீஸுக்குத் தயாராக இருக்கும் ஜெய்லர் படம் பெரும் எதிர்பார்ப்பைப் பெற்றுள்ளது. ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கும் இப்படத்திற்கான முன்னேற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில், மலையாள நடிகர் மோகன் லால், கன்னட நடிகர் சிவராஜ் குமார், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராஃப், தெலுங்கு நடிகர் சுனில், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, யோகி பாபு போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கான ஆடியோ லான்ச் குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தகவல் வெளியிட்டு உள்ளது. அதில் ரஜினிகாந்த நடிக்கும் ஜெய்லர் படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வரும் ஜூலை 28ம் தேதியில் பிரமாண்டமாக நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளது.
இதையும் படிஙக்: பிரமிக்க வைக்கும் கங்குவா கிளிம்ஸ் - சூர்யா ரசிகர்கள் உற்சாகம்!
ஆடியோ லான்சிற்கான டிக்கெட் விலை இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகாத நிலையில், ரூ.500 முதல் டிக்கெட்டின் விலை நிர்ணயிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த விழாவில் ரசிகர்கள் பங்கேற்கும் வகையில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் 1000 இலவச பாஸ்களை வழங்க முன் வந்திருக்கிறது. அதன்படி ஒருவருக்கு 2 பாஸ்கள் வீதம் மொத்தமாக 500 பேருக்கு இந்த பாஸ்கள் விநியோகிக்கப்பட இருக்கின்றன எனத் தெரிவித்துள்ளது.
முதலில் செல்பவருக்கே முன்னுரிமை எனவும் தெரிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு நாளை (ஜூலை 23) திங்கட்கிழமை மதியம் 1 மணிக்குத் தொடங்கவிருக்கிறது. அதற்கான லிங்கை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். இனையதளத்தில் அவர்கள் வெளியிட்டு உள்ள லிங்கிற்கு சென்று பதிவு செய்து பாஸ்களை பெற்றுக்கொள்ளலாம்.
ஜெய்லர் படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி உலக மக்கள் அனைவரையும் முணுமுணுக்க வைத்துள்ளது. ஜெய்லர் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் 'காவாலா' பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ள இப்பாடல், கடந்த 6ம் தேதி வெளியான நிலையில் 60 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இதில் தமன்னாவின் நடனம் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இன்ஸ்டாகிராமில் இன்றும் இப்பாடல் டிரெண்டிங்கில் உள்ளது.
பின்னர் கடந்த ஜூலை 17ம் தேதி ஜெய்லர் படத்தின் இரண்டாவது பாடல் "ஹுக்கும்..டைகர் கா ஹுக்கும்" வெளியாகி ரஜினிகாந்த ரசிகர்களைக் கொண்டாட வைத்துள்ளது. மேலும், இப்படத்திற்கான மற்ற பாடல்களை கேட்பதற்கு பலர் ஆர்வமாக உள்ளனர். இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் என்னும் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்திருக்கிறார்.
முன்னதாக இந்தப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியது. நீண்ட இடைவெளிக்குப் பின் ரஜினிகாந்தை நேரில் சந்திக்க ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிஙக்: Kerala State Film Awards: மம்முட்டி சிறந்த நடிகர்.. நண்பகல் நேரத்து மயக்கம் சிறந்த படம்!