சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அதில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அமைச்சர் சக்கரபாணி பேரவையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
* திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் கிடங்கு வளாகத்தில் உள்ள காலி இடத்தில் கூடுதலாக 3400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நவீன சேமிப்பு கிடங்கு 2 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.
* அரியலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் 3400 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நவீன சேமிப்புக் கிடங்குகள் 7 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும்.
* 100 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 33 கோடி மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதியின் கீழ் அமைக்கப்படும்
* பொது விநியோக திட்ட செயல்பட்டினை வட்டளவில் துரிதப்படுத்த வகையில் மூன்று மாவட்டங்களில் 8,500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மூன்று புதிய வட்ட செய்முறை கிடங்குகள், கிடங்கு அலுவலகங்கள், சுமை தூக்குவோர் ஓய்வறைகள், உள்ளிட்ட பதினைந்து கோடி 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நபார்டு நிதி உதவியுடன் கட்டப்படும்.
* தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பொது விநியோகத் திட்டம் பொருட்களின் சேமிப்பு கொள்ளளவினை மேம்படுத்தும் வகையில் 9000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நான்கு புதிய சேமிப்பு கிடங்குகள் 15 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும்.
* திருவள்ளூர் மதுரை விருதுநகர் திருவண்ணாமலை மாவட்டங்களில் புதிய சேமிப்புக் கிடங்குகள் கட்டப்படும்
* டெல்டா மாவட்டங்களில் 65 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய நெல் சேமிப்பு கிடங்குகள் 45 கோடி மதிப்பீட்டில் நபார்டு நிதி உதவி உடன் அமைக்கப்படும்
* செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் மதுரை மாவட்டங்களில் 52 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய நெல் சேமிப்பு கிடங்குகள் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
* சென்னையில் கோபாலபுரம் மற்றும் அண்ணா நகரில் இயங்கி வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் இரண்டு அமுதம் பல்பொருள் அங்காடிகள் பொதுமக்களின் வசதிக்காக 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்படும்
* 2023ஆம் ஆண்டு ஐநா சபையில் சர்வதேச சிறுதானிய ஆண்டாக கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் சிறுதானிய உணவு திருவிழா நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
* நீலகிரி மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட விநியோகம் க்யூ ஆர் கோடு உதவியுடன் முதற்கட்டமாக செயல்படுத்தப்படும்.
குற்றப்புலனாய்வுத் துறையில் வெளி முகமை மூலம் பணியமர்த்தப்படும் துப்புரவு பணியாளர்களுக்கு மாத ஊதியம் 6 ஆயிரம் ரூபாயிலிருந்து 15,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை அமைச்சர் சக்கரபாணி அறிவித்தார்.
இதையும் படிங்க: குரூப் 4 தட்டச்சர் தேர்வில் முறைகேடா? மீண்டும் எழுந்த தேர்வு முறைகேடு சர்ச்சை!