ETV Bharat / state

சதுரங்க வேட்டை படப்பாணியில் 100 கோடி பணமோசடி..!

சென்னை:சதுரங்க வேட்டை படப்பாணியில் எம்.எல்.எம் நிறுவனம் நடத்தி ரூ.100 கோடி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாதிக்கப்பட்டவர்கள் டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.

mlm fraud petition
mlm fraud
author img

By

Published : Dec 2, 2019, 1:49 PM IST

Updated : Dec 2, 2019, 2:15 PM IST

சென்னை அரும்பாக்கத்தில் சதுரங்க வேட்டை படத்தில் வருவது போல் ட்ரீ இந்தியா எக்ஸ்ட்ரீம் என்ற பெயரில் எம்.எல்.எம் நிறுவனத்தை நடத்தி அதன் மூலம் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு வகையான தொழில்களில் முதலீடு செய்பவர்களின் பணம் 100 நாட்களில் இரட்டிப்பாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து, தங்களின் பணம் இரு மடங்காக கிடைக்கும் என இந்த நிறுவத்தின் உரிமையாளர் பார்திபன், சிவக்குமார், யுவராஜ், ஹரிஷ்வாணன் உள்ளிட்டோர் கூறிய வார்த்தைகளை நம்பி 500 க்கும் மேற்பட்டோர் ரூ.100 கோடி வரை முதலீடு செய்துள்ளனர்.

அந்த நிறுவனம் கூறியது போல நூறுநாள்கள் முடிவடைந்ததும் தங்களது பணம் இரட்டிப்பாக திரும்ப கிடைக்கும் என மூதலீடு செய்தவர்கள் எண்ணியிருந்த நிலையில், நூறுநாள் முடிவடைந்து பணத்தை கேட்க ட்ரீ இந்தியா எக்ஸ்ட்ரீம் அலுவலத்திற்குச் சென்ற போது அலுவலகத்தை மூடிவிட்டு உரிமையாளர்கள் தலைமறைவாகியது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த நிறுவனத்தால் பாதிக்கபட்ட 100க்கும் மேற்பட்டோர் இன்று சென்னையில் உள்ள காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்தில் புகார் மனு அளிப்பதற்கு வந்திருந்தனர்.

அப்போது, பாதிக்கப்பட்ட ஒருவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சம்பந்தபட்ட நபர்களை தேடிக் கண்டுபிடித்து அவர்களிடமிருந்து தங்களது பணத்தை மீட்டுத் தரவும், அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்ககோரியும் காவல்துறை தலைமை இயக்குனர் ஜே.கே திரிபாதியிடம் புகார் மனு கொடுத்துள்ளதாக கூறினார்.

புகார் அளிக்க வந்த பாதிக்கப்பட்டவர்கள்

தொடர்ந்து அவர் கூறுகையில், இதுபோன்ற நிறுவனங்கள் கொடுக்கும் போலி விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் யாரும் தங்களைப் போல் ஏமாற வேண்டாம் என அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க:

நடிகர் ராகவா லாரன்ஸ் பெயரில் பண மோசடி - காவல் ஆணையரிடம் புகார்

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 02.11.19

சதுரங்க வேட்டை படப் பாணியில் எம்.எல்.எம் நிறுவனம் நடத்தி 100 கோடி மோசடி.. பாதிக்கப்பட்டவர்கள் டி.ஜி.பி அலுவலகத்தில் புகார்...

சதுரங்க வேட்டை படத்தில் எம்.எல்.எம் நிறுவனத்தை சென்னை அரும்பாக்கத்தில் ட்ரீ இந்தியா எக்ஸ்ட்ரீம் என்கிற பெயரில் நிறுவனம் நடத்தி அதன் மூலம் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு வகையான தொழில்களில் முதலீடு செய்பவர்களின் பணம் 100 நாட்களில் இரட்டிப்பாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு பொதுமக்களிடம் 100 கோடி வரை ஏமாற்றிய நிறுவத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை டி.ஜி.பி யிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தனர். தங்களின் பணம் இரு மடங்காக கிடைக்கும் என நம்பி இந்த நிறுவத்தின் உரிமையாளர் பார்திபன், சிவக்குமார், யுவராஜ் மற்றும் ஹரிஷ்வாணன் ஆகியோர் கூறிய வார்த்தைகளை நம்பி 500 க்கும் மேற்பட்டோர் 100 கோடி வரை தங்களது பணத்தை ஏமாற்றி விட்டு உரிமையாளர்கள் தலைமறைவாக ஆகிவிட்டனர் என்றும் வேதனைப்படுகின்றனர் பாதிக்கப்பட்டவர்கள். மேலும், சம்மந்தப்பட்ட நபர்களை தேடிக் கண்டுபிடித்து அவர்களிடமிருந்து தங்களது பணத்தை மீட்டுத் தரவும், அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கவும் கோரி டி.ஜி.பி திரிபாதியிடம் புகார் மனு கொடுத்துள்ளதாகவும் புகாரளிக்க வந்திருந்தவர்கள் தெரிவித்தனர். அவர்கள் மேலும் கூறுகையில் இதுபோன்ற நிறுவனங்களால் கொடுக்கப்படும் போலி விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் யாரும் தங்களைப் போல் ஏமாற வேண்டாம் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் கேட்டுக்கொண்டனர்...

tn_che_mlm_fraud_multi_crore_cheating_script_7204894Conclusion:
Last Updated : Dec 2, 2019, 2:15 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.