சென்னை: சென்னை ஓட்டேரி ராமலிங்கபுரம் பகுதிக்கு உட்பட்ட டிரஸ்ட் ஸ்கொயர் தெருவில் வசித்து வருபவர், ஓய்வுபெற்ற ஆசிரியை சுலோச்சனா. இவர் கடந்த 2009ஆம் ஆண்டு தனது வீட்டில் தனியாக இருக்கும் நேரத்தில் திருவள்ளூர் மாவட்டத்தைச்சேர்ந்த சுரேஷ் மற்றும் மகேஷ் பாலாஜி ஆகியோர் ஆசிரியை சுலோச்சனாவின் கை, கால்களை கட்டிவிட்டு பணம் தரவில்லை என்றால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர்.
பின்பு வீட்டின் பீரோவில் இருந்த 6,500 ரூபாய் பணம் மற்றும் கழுத்தில் அணித்திருந்த தாலி உள்ளிட்ட தங்க நகைகளை திருடிச்சென்றனர். இதையடுத்து இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பாக சென்னை தலைமைச்செயலக குடியிருப்பு காவல் நிலையத்தில் ஆசிரியர் சுலோச்சனா புகார் அளித்ததின் பெயரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு சென்னை அள்ளிக்குளம் வளாகத்தில் அமைந்துள்ள 23ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி உமா மகேஸ்வரி முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் காவல் துறை தரப்பில் மாநகர கூடுதல் குற்றவியல் கூடுதல் வழக்கறிஞர் செந்தில் ஆஜராகி வாதிட்டார்.
இந்த கொள்ளைச்சம்பவம் நிரூபிக்கப்பட்டதால் கொள்ளையில் ஈடுபட்ட சுரேஷ் என்பவருக்கு 10ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 5ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
இதையும் படிங்க: டாஸ்மாக் கடையில் சைட் டிஷ் வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் கொலை