ETV Bharat / state

கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட 10 பேர் கைது: 24 மணி நேரத்தில் வழக்கை முடித்த காவலர்களுக்கு பாராட்டு!

சென்னையில் ஒரேநாளில் பல குற்றச் செயல்களில் ஈடுபட்ட 10 பேரை, 24 மணி நேரத்தில் கைதுசெய்த காவல் துறையினருக்கு, சென்னை காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்தார்.

காவலர்களுக்கு பாராட்டு தெரிவித்த சென்னை காவல் ஆணையர்

author img

By

Published : Sep 24, 2020, 6:36 PM IST

சென்னை: ஒரேநாளில் பல இடங்களில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட 10 பேரை 24 மணி நேரத்தில் பிடித்த காவல் துறையினருக்கு, சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

சென்னையில் நேற்று (செப்.23) நடைபெற்ற ஏழு கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய 10 பேரை காவல் துறையினர் கண்கானிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளின் உதவியுடன் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து 15 ஆயிரம் ரூபாய் பணம், 13 செல்போன்கள், ஐந்து சவரன் மதிப்புள்ள மூன்று தங்கச் செயின்கள், மூனறு கத்திகள், இரண்டு இருசக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், அனைத்து குற்றச் சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே கும்பல் தான் என விசாரணையில் தெரியவந்தது. நேற்று (செப்.23) அதிகாலை ஒரு மணியளவில் மயிலாப்பூர் லஸ் கார்னர் பகுதியில் தொடங்கி ராயப்பேட்டை, நுங்கம்பாக்கம், ராயபுரம், தண்டையார்பேட்டை வரை கண்ணில் பட்டவர்களைத் தாக்கி, செல்போன், தங்கச் செயின், பணம் ஆகியவற்றை கத்தியைக் காட்டி மிரட்டி பறித்துச் சென்றதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, குற்றவாளிகளிடம் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களைக் காட்சிப்படுத்தும் நிகழ்ச்சி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று (செப்.24) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், வழக்குகளை விரைந்து விசாரணை நடத்தி, ஒரே நாளில் இதில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைதுசெய்த காவல் உதவி ஆணையர் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் 15 பேருக்கு சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

பின்னர் பேசிய காவல் ஆணையர் கூறியதாவது, “வழக்குகளை விசாரிப்பதற்கு கால அளவு நிர்ணயம் செய்யப்படுகிறதா என்ற கேள்விக்கு, குற்றங்களைக் கண்டுபிடிக்க கால அளவு நிர்ணயித்தால் விசாரணையை பாதிக்கும் என்பதால் கூடுமான அளவு விசாரணையை விரைந்து முடிக்க காவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். மேலும் கடந்த காலங்களில் 90 சதவீதமான குற்றங்களில் குற்றவாளிகளை 24 மணி நேரத்தில் கைது செய்திருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

காவலர்களுக்கு பாராட்டு தெரிவித்த சென்னை காவல் ஆணையர்

தொடர்ந்து பேசிய அவர், “ஐபிஎஸ் அலுவலர்களின் பெயரில் போலி சமூக வலைதள பக்கம் உருவாக்கி, பண மோசடி செய்யும் கும்பலிலுள்ள நபர்களை அடையாளம் கண்டு, அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்களின் வங்கிக் கணக்கு ஏற்கனவே முடக்கப்பட்டுவிட்டது. அவர்கள் பயன்படுத்திய செல்போன் எண்கள், ஐபி முகவரியை வைத்து விசாரணை நடத்திவருகிறோம். கரோனா காலம் என்பதால் தனிப்படை காவல் துறையினர், வெளி மாநிலம் செல்வதில் நடைமுறை பிரச்னைகள் உள்ளன. விரைவில் குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை காவல் துறையினர் செல்வார்கள்” என்றார்.

மேலும், “நவீன கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றும் சில காவலர்கள் மீது ஊழல் தொடர்பான புகார் கடிதம் எனது கவனத்திற்கு வந்துள்ளது. அதை முறையாக விசாரித்து வருகிறோம். குற்றம் நிரூபிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இதையும் படிங்க: ‘நேர்மையான காவலர்கள்’ என்று கலாய்த்து புகார் மனு: காவல் துறை விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.