ETV Bharat / state

விஷவாயு தாக்கி இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி!

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் முத்தியால்பேட்டை கிராமத்தில் விஷவாயு தாக்கி இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

edappadi
edappadi
author img

By

Published : Aug 25, 2020, 4:02 PM IST

இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், " காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டம், முத்தியால்பேட்டை கிராமத்தில் அமைந்துள்ள கழிவுநீர் பாதாள சாக்கடையை 20.8.2020 அன்று சுத்தம் செய்வதற்காக இறங்கும்போது வி.லட்சுமணன் மற்றும் இவரை காப்பாற்றச் சென்ற சுனில் ஆகிய இருவரும் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

இச்சம்பவத்தில் உயிரிழந்த லட்சுமணன் மற்றும் சுனில் ஆகிய இரண்டு நபர்களின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க நான் உத்தரவிட்டுள்ளேன்‌.

இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த இரண்டு நபர்களின் குடும்பத்திற்கு தலா பத்து லட்சம் ரூபாய் வழங்க காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்திற்கு நான் உத்தரவிட்டுள்ளேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.