ETV Bharat / state

சென்னையில் 10 லட்சம் கரோனோ தடுப்பூசிகள் தயார்- ஆணையர் தகவல் - chennai corporation commissioner Prakash

சென்னையில் 10 லட்சம் கரோனோ தடுப்பூசிகள் தயார் நிலையில் உள்ளன எனப் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

10 lacks vaccine ready in chennai  chennai corporation commissioner Prakash
சென்னையில் 10 லட்சம் கரோனோ தடுப்பூசிகள் தயார்- சென்னை ஆணையர்
author img

By

Published : Feb 3, 2021, 7:37 PM IST

சென்னை: கரோனா தடுப்பு முன்கள பணியாளருக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் தலைமையில் சென்னை ரிப்பன் மாளிகையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், "முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசியை செலுத்தும் பணி 30 விழுக்காடு நிறைவடைந்துள்ளது. கிட்டத்தட்ட1.50 லட்சம் நபர்கள் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக முன்பதிவு செய்துள்ளனர்.

சென்னையில் 10 லட்சம் கரோனோ தடுப்பூசிகள் தயார் - சென்னை ஆணையர்

இந்த மாதத்திற்குள் 55,000 பேருக்கு தடுப்பூசி செலுத்துவதே இலக்காக இருந்தது. ஆனால், 20 ஆயிரம் நபர்களுக்கு மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது. 10 லட்சம் டோஸ் தடுப்பூசி தயாராக உள்ளது. 47 மைதானங்களில் தற்போது தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் கரோனா தடுப்பூசி செலுத்தும் மையங்களை அதிகரிப்போம்.

தற்போது நாள் ஒன்றுக்கு 1,500 மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு 10,000 தடுப்பூசி செலுத்துவது மாநகராட்சி இலக்காக உள்ளது. மக்கள் அச்சப்படாமல் அனைவரும் தடுப்பூசி செலுத்த முன்வர வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: அரசாங்கம் கிராம சபையை கூட்டாததால் நாங்கள் கூட்டுகிறோம் - ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.