ETV Bharat / state

போதிய பயணிகள் இல்லாமல் இன்று 10 விமானங்கள் ரத்து

சென்னை: உள்நாட்டு முனையத்தில் போதிய பயணிகள் இல்லாமல் இன்று மட்டும் 10 விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

10 flights canceled without enough passengers

author img

By

Published : Jun 30, 2020, 11:49 AM IST

சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்தில் இன்று போதிய பயணிகள் இல்லாமல் சென்னையிலிருந்து கொச்சி, ராஜமுந்திரி, கடப்பா, கவுகாத்தி, விஜயவாடா, விசாகப்பட்டினம், மைசூரு ஆகிய ஏழு விமானங்கள், அந்தமான் செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ், ஹைதராபாத், கொல்கத்தா செல்லும் ஏர்ஏசியா விமானங்கள் என்று மொத்தம் 10 விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.

இவைகள் தவிர சென்னையிலிருந்து டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு, புவனேஸ்வர், திருவனந்தபுரம், மதுரை, திருச்சி, கோவை, தூத்துக்குடி, சேலம் உள்ளிட்ட இடங்களுக்கு 26 விமானங்கள் குறைந்த பயணிகளுடன் இயக்கப்படுகின்றன. அதேபோல் வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களிலிருந்து 26 விமானங்கள் சென்னை வருகின்றன.

சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்தில் பயணிகள் இல்லாமல் விமானங்கள் ரத்துசெய்ய காரணம் பயணிகளுக்கு இ-பாஸ் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள்தான் என்று விமான நிலைய அலுவலர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், ஜூலை 6ஆம் தேதியிலிருந்து தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அரசு இ-பாஸ் வழங்குவதில் விதித்துள்ள கடுமையான நிபந்தனைகளையும் ஓரளவு தளர்த்தினால் விமான பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.