சென்னை: தமிழ்நாடு காவல்துறையில், காலியாக உள்ள 444 உதவி ஆய்வாளருக்கான (Sub Inspector) தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருந்தது.
இத்தேர்விற்காக, கடந்த மார்ச் 8ஆம் தேதி முதல் ஏப்ரல் 7ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி உதவி ஆய்வாளர் தேர்வுக்காக பலர் இணையதளம் மூலமாக விண்ணப்பித்து வந்தனர். மேலும் விண்ணப்பிக்கும் முறையில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் உதவி மையத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாகவே விண்ணப்பிக்கும் இணையதளத்தின் சர்வர் பிரச்னையாக இருந்து வருகிறது. இதனால் விண்ணப்பிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆகையால், விண்ணப்பிக்கும் தேதியை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இந்த கோரிக்கையை ஏற்று உதவி ஆய்வாளர் தேர்வுக்கான விண்ணப்பிக்கும் தேதியை வருகிற 17ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: '7.5 % இட ஒதுக்கீடு வரவேற்கத்தக்கது' - கல்வியாளர் ஜெயபிரகாஷ்காந்தி