ETV Bharat / state

'இரண்டாம் அலையில் 10 காவலர்கள் உயிரிழப்பு' - காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் - Chennai police commissioner Shankar Jiwal

கரோனா தொற்றின் இரண்டாம் அலையில் இதுவரை சென்னையில் 10 காவலர்கள் உயிரிழந்துள்ளதாக மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

சங்கர் ஜிவால்
சங்கர் ஜிவால்
author img

By

Published : May 13, 2021, 7:07 AM IST

சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் போக்குவரத்து புலானாய்வு காவலராக பணியாற்றி வந்தவர் சுரேஷ் குமார், கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி செய்து கொண்ட கரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யபட்டது. இந்நிலையில் சென்னை ஓமந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் கடந்த மே 1ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சிட்லபாக்கம் காவல் நிலையத்தில், உயிரிழந்த காவலர் சுரேஷ்குமார் உருவபடத்திற்கு மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சங்கர் ஜிவால், "இரண்டாம் கட்ட கரோனா பரவலில் இதுவரை காவல்துறைச் சேர்ந்த 10 பேர் இறந்துள்ளனர். இதில் 6 பேர் போக்குவரத்து காவலர்களாக பணியாற்றி வந்துள்ளனர்.

காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் பேட்டி

காவல் துறையினர் இறந்தால் அவர்களது குடும்பத்தினருக்கு உடனடியாக ரூ.3 லட்சம் நிவாரண தொகை வழங்கப்படுகிறது. மேலும் கரோனாவால் காவல்துறையினர் உயிரிழப்பதைத் தடுக்கும் வகையில், காவலர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற தனிநிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.