ETV Bharat / state

10,12 திருப்புதல் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரம்- மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியிடை நீக்கம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல் திருப்புதல் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியிடைநீக்கம்

author img

By

Published : Feb 15, 2022, 1:15 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் பள்ளிகள் திறப்பதில் கால தாமதம் ஆனது. மேலும் மாணவர்கள் நீண்ட நாட்களாகப் பள்ளிக்கு வருகை தராமல் இருந்தால், மாணவர்களின் தேர்வு அச்சத்தைப் போக்கும் வகையில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்குத் திருப்புதல் தேர்வு அரசுத் தேர்வுத்துறையின் மூலம் வினாத்தாள் தயார் செய்யப்பட்டு முதல் திருப்புதல் தேர்வு கடந்த 9 ந் தேதி முதல் 17 ந் தேதி வரை நடைபெற்று வருகிறது.

மேலும் அரசுத் தேர்வுத்துறையின் சார்பில் பொதுத் தேர்வினை போல் திருப்புதல் தேர்வு நடத்தப்பட வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டு இருந்தது.

ஆனால் அரசுத் தேர்வுத்துறையின் விதிமுறைகளைப் பின்பற்றாமல் அனைத்து பள்ளிகளுக்கும் முன்கூட்டியே வினாத்தாள்களை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் வழங்கி இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சமூகவலைத்தளத்தில் வெளியான வினாத்தாள்!

இந்நிலையில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் வெளியானது.இது குறித்து திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் போளூரில் உள்ள தனியார் பள்ளியில் தேர்வுத்துறை இணை இயக்குநர் பொன் குமார் விசாரணை நடத்தினார்.

மேலும் விசாரணை அறிக்கையை பள்ளிக்கல்வித்துறை ஆணையரிடம் அளித்துள்ளனர்.பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் தேர்வினை நடத்துவதில் ஏற்பட்ட கவனக்குறைவு குறித்த விவரங்களையும், முறைகேடுகளையும் அரசிடம் அறிக்கையாக சமர்ப்பித்துள்ளார்.

வினாத்தாள்களை மாணவர்களுக்கு விநியோகித்த தனியார் பள்ளி

விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. வந்தவாசி மற்றும் போளூரில் உள்ள தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளிக்கு அனுப்பப்பட்ட வினாத்தாள்களை மாணவர்களுக்கு ஜெராக்ஸ் எடுத்து அளித்துள்ள தகவல் தெரியவந்துள்ளது.

மேலும் சில ஆசிரியர்களுக்கும் அனுப்பி உள்ளனர். திருப்புதல் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களுக்கு பொதுத் தேர்வுக்கான மதிப்பெண்கள் வழங்கப்படும் என்ற நோக்கத்தில் இது போன்ற தவறில் ஈட்டுப்பட்டுள்ளதும் தெரியவந்தது. மேலும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வினாத்தாள் கட்டுரைப்பு மையங்களை அமைக்காமல் , பள்ளிகளுக்கே வினாத்தாள்களை முன்கூட்டியே வழங்கியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள தகவலில்,

தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளில் படிக்கும் 10,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு 9 ந் தேதி முதல் திருப்புதல் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் சில தேர்வுகளுக்கான வினாத்தாள் தேர்வு நடைபெறும் முன்பே சமூக வலைத்தளங்களில் வெளிவந்தது.

இது குறித்து துறை ரீதியான விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஆக்சிலியம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் வந்தவாசி ஹாசினி இன்டர்நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகளிலிருந்து வினாத்தாள் வெளியானது கண்டறியப்பட்டுள்ளது.

இதற்குக் காரணமான பள்ளிகளைச் சேர்ந்த நபர்களின் மீது தக்க குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் இத்தேர்வுகள் நடத்துவது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் அளித்த வழிகாட்டுதல்கள் சரியாகப் பின்பற்றாத அரசு அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பணியிடை நீக்கம்!

மேலும் இந்நிலையில் பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை அருள்செல்வனை அதிரடியாகப் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் ஏற்கனவே வெளியிடப்பட்ட அட்டவணையின் படி திருப்புதல் தேர்வுகள் எந்தவித மாற்றமின்றி தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்

விசாரணை முடியும் வரை மாவட்டத்தை விட்டு வெளியில் செல்லக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார் திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கூடுதல் பொறுப்பை விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியாவிற்கு ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள வந்தவாசி மற்றும் போளூர் தனியார்ப் பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு பள்ளிக் கல்வித்துறை ஆணையர் கடிதம் எழுதியுள்ளார்.

இதையும் படிங்க:தொடர்ந்து லீக் ஆகும் வினாத்தாள்: அதிர்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.