ETV Bharat / state

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 1,15,785 பேர் பயன் - 1 lakh people benefited from TN health service at doorstep scheme

மக்களைத் தேடி மருந்துவம் திட்டத்தில் இன்று (ஆக.17) காலை வரை 1,15,785 பேர் பயன் அடைந்துள்ளனர்.

மக்களைத் தேடி மருத்துவம்
மக்களைத் தேடி மருத்துவம்
author img

By

Published : Aug 17, 2021, 5:09 PM IST

சென்னை: கரோனா மூன்றாம் அலையை நாடு சந்திக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் நோய் கட்டுப்பாட்டை மேம்படுத்தும் வகையில் மக்களின் வீடுகளுக்கே சென்று சுகாதார சேவைகளை வழங்கும் 'மக்களைத் தேடி மருத்துவம்' எனும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கி வைத்தார்.

திட்டத்தின் நோக்கங்கள்

இந்தத் திட்டத்தின் கீழ் வரும் அனைத்து பயனாளிகளும் மக்கள்தொகை பதிவேட்டின்கீழ் பதியப்பட்டு, அவர்களது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்பதே இதன் முக்கிய அம்சமாகும்.

மாநிலம் முழுவதும் கரொனா தொற்றைக் கண்காணித்து அத்தியாவசிய சேவைகள் வழங்கி கட்டுக்குள் கொண்டு வருவதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களுள் ஒன்று. இத்திட்டத்தில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் பயிற்சிபெற்ற பெண் சுகாதாரத் தன்னார்வலர்களும் இடம்பெற்றுள்ளனர்.

முதற்கட்டப் பணிகள்

இந்தத் திட்டம் முதற்கட்டமாக 50 வட்டாரங்களிலுள்ள 1,172 அரசு துணை சுகாதார நிலையங்கள், 189 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 50 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று மாநகராட்சிகளில் (சென்னை, கோயம்புத்தூர், திருநெல்வேலி) தலா ஒரு மண்டலம் என மொத்தம் 21 நகர ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் படிப்படியாக இந்த ஆண்டு இறுதிக்குள் மாநிலத்தின் பிற கிராம மற்றும் நகர்ப்புறப்பகுதிகளில் மக்களை சென்றடையும் வகையில் விரிவுப்படுத்தப்படும். இத்திட்டம் தொடங்கப்பட்டு 16ஆம் தேதி வரை உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்களுள் 52,678 நபர்களுக்கும், நீரிழிவு நோய் உள்ளவர்களுள் 33,068 நபர்களுக்கும், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் உள்ளவர்களுள் 23,497 நபர்களுக்கும் மருந்துப் பெட்டகம் வழங்கப்பட்டது.

மேலும் 3,304 நபர்களுக்கு நோய் ஆதரவு சிகிச்சையும், 3,220 நபர்களுக்கு இயன்முறை சிகிச்சையும் வழங்கப்பட்டது. இதைத் தவிர்த்து 18 சிறுநீரக நோயாளிகளுக்கு சுய டயாலிஸ் செய்து கொள்வதற்குத் தேவையான பைகள் வழங்கப்பட்டது. இத்திட்டத்தினால் மொத்தம் 1,15,785 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.

பயனடைந்தோர்

இந்நிலையில், மக்களைத் தேடி மருந்துவம் திட்டத்தில் இன்று (ஆக.17) காலை வரை 1,15,785 பேர் பயன் அடைந்துள்ளனர் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: முரசொலி மாறன் பிறந்தநாள்: உலக அரங்கில் வளரும் நாடுகளுக்காக ஓங்கி ஒலித்த ’கலைஞரின் மனசாட்சி’!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.