சென்னை: விநாயகர் சதுர்த்தி விழா, இன்று (செப்.18) பல்வேறு இடங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி, கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. தமிழகம் முழுவதும் பொது இடங்களில் சுமார் 1.50 லட்சம் விநாயகர் சிலைகள் வைத்து பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது.
தொடர்ந்து தமிழகத்தில் பிரசதிப்பெற்ற கோயில்களான திருச்சி மலைக்கோட்டை, பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், கோவை புளியங்குளம் முந்தி விநாயகர், கும்பகோணம் திருவலஞ்சுழி சுவேத விநாயகர், புதுச்சேரி மணக்குள விநாயகர், கேரளபுரம் விநாயகர் ஆகிய விநாயகர் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து, சென்னையில் மயிலை செங்கழுநீர் விநாயகர், லஸ் கார்னர் (Luz Corner) நவசக்தி விநாயகர் உட்பட அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. அதேப்போல் வீடுகளில் பூஜை செய்வதற்காக, சென்னையின் பல்வேறு பகுதிகளில் 50 ரூபாய் முதல் 500 ரூபாய் வரையிலான சிறிய விநாயகர் சிலைகளை மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.
மேலும், சென்னையில் 1500 சிலைகள் என, தமிழகம் முழுவதும் 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. இந்த ஆண்டு விநாயகர்சிலைகள் வைக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், பொது இடங்களில் பூஜைக்காக வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட சிலைகள் ஒரு வார வழிபாட்டுக்கு பிறகு, வரும் 24ஆம் தேதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளன. இதனைத்தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதியில் 10,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படு வருகின்றனர்.
விழாக்கால சிறப்பு விற்பனைகள்: சென்னையை பொறுத்தவரை பூஜை பொருட்கள் வாங்க கோயம்பேடு, மயிலாப்பூர் போன்ற பகுதிகளில் மக்களின் கூட்டம் காலை முதல் அதிகமாக காணப்பட்டது. அதனை தொடர்ந்து மாலை நேரத்தில் கூட்டம் மேலும் இரட்டிப்பாக காணப்பட்டது.
சாலை ஓரங்களிலேயே பொரி, ஆப்பிள், ஆரஞ், சாத்துக்குடி, மக்காச்சோளம், கொய்யா பழங்கள், கரும்பு, தென்னங்கீற்று ஆகியவை அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டன. மேலும் கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லி 1,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இது நேற்று காலைய ஒரு கிலோ மல்லி 1,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
மேலும் மற்ற பூவகைகளான ஐஸ் மல்லி கிலோ 700 ரூபாய் முதல் 1,200 ரூபாய்க்கும், கனகாம்பரம் கிலோ 600 ரூபாய் முதல் 800 ரூபாய்க்கும், ஜாதிமல்லி கிலோ 600 ரூபாய் முதல் 1,000 ரூபாய்க்கும், சம்பங்கி பூ கிலோ 300 ரூபாய் முதல் 400 ரூபாய்க்கும், சாமந்தி பூ கிலோ 60 ரூபாய் முதல் 100 ரூபாய்க்கும், பன்னீர் ரோஸ் கிலோ 100 ரூபாய் முதல் 130 ரூபாய்க்கும் விற்கபட்டன.
போலீசார் பலத்த பாதுகாப்பு: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 74 ஆயிரம் போலீசார் ஈடுபடுவதாக தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். இதேப்போல், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை மாநகர பகுதிகளில் 10 ஆயிரம் போலீசாரும், தாம்பரம் மற்றும் ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரம் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலைகள் கரைப்பு: பொது இடங்களில் பூஜைக்காக வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் ஒரு வார வழிபாட்டுக்கு பிறகு, வரும் 24ஆம் தேதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளன. சிலைகள் கரைப்பது தொடர்பாக போலீஸார் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஏற்கெனவே பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை உட்பட தமிழகம் முழுவதும் சிலைகள் வைக்கப்படும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அந்த வகையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 24 ஆயிரம் போலீஸாரும், தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: Vinayagar Chaturthi : உச்சி பிள்ளையாருக்கு 150 கிலோ மெகா சைஸ் கொழுக்கட்டை படையல்..!