ETV Bharat / state

பொறியியல் படிப்பு: 8 ஆண்டிற்கு பின்னர் 1,74,930 பேர் விண்ணப்பம் - பொறியியல் படிப்புகள்

சென்னை: பொறியியல் படிப்பில் சேர எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு 1 லட்சத்து 74 ஆயிரத்து 930 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.

பொறியியல்
பொறியியல்
author img

By

Published : Aug 30, 2021, 12:41 PM IST

Updated : Aug 30, 2021, 3:13 PM IST

பொறியியல் படிப்பின் மீதான ஆர்வம் மாணவர்களுக்கு சமீப காலமாக குறைந்துவிட்டதாக ஒரு தரப்பினர் கூறினர். ஆனால் தற்போது பொறியியல் படிப்பில் சேர 1 லட்சத்து 74 ஆயிரத்து 930 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

மேலும் கரோனா பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு, அதிக மதிப்பெண்கள் பெற்றதால் மாணவர்களுக்கு சிறந்த கல்லூரிகள் கிடைக்கும் என்பதாலும் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கருதப்படுகிறது.

கரோனா தொற்றின் காரணமாக அரசு தேர்வுத் துறையின் மூலம் வழங்கப்பட்ட மதிப்பெண்கள் பெரும்பாலும் 60 சதவீதத்திற்கு மேல் இருப்பதால் மாணவர்கள் வேலை வாய்ப்பிற்கு செல்வதற்கும் பயனுள்ளதாக அமையும் என்பதால் அதிகளவில் விண்ணப்பித்துள்ளதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே, பொறியியல் படிப்பில் சேர ஜூலை 26 முதல் ஆக.24ஆம் தேதி வரை, ஆன்லைன் மூலம் www.tneaonline.org, www.tndte.gov.in என்ற இணையதளங்களின் மூலம் தொழில் நுட்ப கல்வி இயக்ககம் விண்ணப்பங்களை பெற்றது. தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் விளையாட்டு வீரர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பினை முடித்துள்ளது.

ஜெயபிரகாஷ்

பொறியியல் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பம் செய்திருந்த ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 930 மாணவர்களுக்கான ரேண்டம் எண்கள் 25ஆம் தேதி வெளியிடப்பட்டன.

அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் பள்ளிக் கல்வித் துறையின் கல்வித்தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தின் மூலம் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரையில் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்த மாணவர்களுடைய விவரத்தின் அடிப்படையில் 8 ஆண்டிற்கு பின்னர் மீண்டும் பொறியியல் படிப்பில் சேர மாணவர்கள் அதிகளவில் விண்ணப்பித்துள்ளது தெரியவந்துள்ளது.

இதற்கு முன், அதிகபட்சமாக 2013ஆம் ஆண்டில் 1 லட்சத்து 90 ஆயிரத்து 850 மாணவர்கள் விண்ணப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டு வாரியாக விண்ணப்பித்தவர்கள் விவரம்

2007 - 92,368
2008 - 1,25,341
2009 - 1,33,918
2010 - 1,69,666
2011 - 1,50,333
2012 - 1,81,608
2013 - 1,90,850
2014 - 1,75,188
2015 - 1,56,010
2016 - 1,38,378
2017 -1,45,062
2018 - 1,69,368
2019 - 1,33,116
2020 - 1,60,834
2021 - 1,74,930

கல்வியாளர் ஜெயபிராகஷ் காந்தி கூறுகையில், ”பொறியியல் படிப்பின் மீது மாணவரகளுக்கு ஏற்பட்டுள்ள ஆர்வத்தாலும், வீட்டில் இருந்து வேலை செய்யலாம் என்ற வாய்பினால் மாணவிகளும் அதிகளவில் விண்ணப்பித்துள்ளனர்.

கரோனா பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் இருந்து அரசுப் பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்பதாலும், 12ஆம் வகுப்பு மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றதால் சிறந்த கல்லூரிகள் கிடைக்கும் என்பதால் அதிகளவில் விண்ணப்பம் செய்துள்ளனர்” என்றார்.

கலந்தாய்வு விவரங்கள்

பொறியியல் படிப்பில் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் 4 ஆம் தேதி வெளியாகிறது. சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 7ஆம் தேதி முதல் 11ஆம் தேதிவரையிலும், பொதுப்பிரிவு கலந்தாய்வு செப்டம்பர் 14ஆம் தேதியிலிருந்து அக்., 4ஆம் தேதிவரையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முதல்முறையாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டில் 7.5 சதவீதம் முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Aug 30, 2021, 3:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.