ETV Bharat / state

'மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் 1.63 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர் - அமைச்சர் மா. சுப்பிரமணியன் - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்

வட கிழக்கு பருவமழை சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் 1 லட்சத்து 63 ஆயிரத்து 63 பேர் பயனடைந்துள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மா. சுப்பிரமணியன்
அமைச்சர் மா. சுப்பிரமணியன்
author img

By

Published : Nov 12, 2021, 7:46 AM IST

சென்னை: சைதாப்போட்டை தொகுதியில் கொத்தவால்சாவடி குடிசை மாற்று குடியிருப்பு பகுதியில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து ஜோன்ஸ் சாலையில் நடமாடும் மருத்துவ குழுவை அவர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், "தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலம் கடந்த 2 நாட்களில் 4 ஆயிரத்து 55 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த முகாம்கள் மூலம் 1 லட்சத்து 63 ஆயிரத்து 63 பேர் பயன் அடைந்துள்ளனர். சென்னையில் 500 இடங்களில் மருத்துவ முகாம் நடைபெறுகிறது. மழைக்காலத்தில் மக்களுக்கு ஏற்படும் காய்ச்சல், சளி, இருமல், சேத்துப்புண், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. இதை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் மூன்று மாதத்திற்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளன. மருத்துவக்கல்லூரிகளில் பணியாற்றி வரும் 100 மருத்துவர்கள் சிறப்பு முகாம்களில் பணியாற்றி வருகின்றனர். மேலும் துணை சுகாதார நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம், மாவட்ட மருத்துவமனைகளில் பணியாற்றும் ஊழியர்கள் 1 லட்சம் பேர் முகாம்களில் பணியாற்றி வருகின்றனர்.

1150 நடமாடும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் தொடங்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் மக்களுக்கு நோய் வராமல் தடுக்க துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னையில் 4 நாட்களில் 50 செ.மீ அளவிற்கு மழை பெய்துள்ளது. மாநகராட்சி ஊழியர்கள் சாலைகளில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் 108, 104 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு மருத்துவ சேவை பெறலாம்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'ஹஜ் புனித யாத்திரை... சென்னை விமான நிலையத்திற்கு அனுமதி வழங்குக' - பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.