ETV Bharat / state

கரோனா பாதிப்பு: தர்பூசணி பயிரிட்ட விவசாயிகளுக்கு நஷ்டம்! - 144 in tamilnadu

செங்கல்பட்டு: ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்ட தர்பூசணி அழுகி நாசமானதால் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

watermelon farming
watermelon wastage
author img

By

Published : Mar 30, 2020, 5:11 PM IST

Updated : Mar 30, 2020, 10:06 PM IST

கரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியா முழுவதும் 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து முடங்கியுள்ளது.

இதனால் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பாதிப்டைந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், செய்யூர் ஆகிய பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர்களில் பயிரிடப்பட்ட தர்பூசணி விவசாயிகள் பாதிப்பு அடைந்துள்ளனர்.

கேரளா, மும்பை போன்ற பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்றிச் செல்ல வாகனங்கள் இல்லாததால் தர்பூசணி நிலத்திலேயே அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

தர்பூசணி பயிரிட்ட விவசாயிகளுக்கு நஷ்டம்

கடன் வாங்கி ஒரு ஏக்கருக்கு சுமார் 50 ஆயிரம் வரை செலவு செய்த நிலையில், முழுவதுமே சேதமடைந்ததால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை தடுக்க அரசாங்கம் கணக்கீடு செய்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் அறுவடைக்கு தயாராக இருக்கும் காய்களை ஏற்றிச் செல்ல வாகனங்களுக்கு அனுமதி தர வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: தமிழ்நாடு அரசிடம் உதவி கோரும் வடமாநில தொழிலாளர்கள்!

Last Updated : Mar 30, 2020, 10:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.