ETV Bharat / state

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் பரப்பளவைக் குறைக்கும் முடிவு வாபஸ்! - தமிழ்நாடு அரசு

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவைக் குறைக்கும் முடிவை, திரும்பப் பெறுவதாகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது சுற்றுச்சூழல், பறவை ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் தப்பியது
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் தப்பியது
author img

By

Published : Dec 17, 2021, 1:46 PM IST

செங்கல்பட்டு: வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் தமிழ்நாட்டின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக உள்ளது. இது 1936ஆம் ஆண்டு பறவைகள் சரணாலயமாக தமிழ்நாடு அரசால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகவும் இது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தப் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவைக் குறைப்பதற்காக, 2020ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

மேலும் ஆண்டுதோறும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் இங்கு வருவது வழக்கமாக இருந்துவந்த நிலையில், இதன் சுற்றளவைக் குறைப்பது, இயற்கைக்கு மாறானது எனவும், பல்வேறு நாடுகளிலிருந்து வரும் பறவைகள் பாதிக்கப்படும் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், பொதுமக்களும் இந்த முடிவிற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

தொடர்ந்து, வேடந்தாங்கலிலிருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனியார் மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையின் அழுத்தத்தினால், தமிழ்நாடு அரசு சரணாலயத்தின் பரப்பளவைக் குறைக்க முயற்சிப்பதாகப் பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் தற்போது, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவைக் குறைக்கும் முடிவைத் திரும்பப் பெறுவதாகத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது சுற்றுச்சூழல், பறவை ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: போலி கால் சென்டர் நடத்திய கும்பல் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.