செங்கல்பட்டு: தாம்பரம் வனச்சரகத்திற்குள்பட்ட அகரம்தென் ஏரி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், சில நாள்களாகத் துப்பாக்கிச் சுடும் சத்தம் கேட்பதாக வனத் துறை அலுவலர்களுக்குப் புகார்கள் வந்தன.
இதையடுத்து வனத் துறை அலுவலர்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது நாட்டுத் துப்பாக்கிகளுடன் இருவர் சுற்றித் திரிவதைக் கண்டு அவர்களிடம் விசாரித்தனர்.
அதில் இருவரும் அகரம்தென் அடுத்த மப்பேடு பகுதியைச் சேர்ந்த கிரிமணி (35), சுமன் (21) என்பது தெரியவந்தது. கரோனாவால் வேலையின்றி நீர்க்காகங்களை வேட்டையாடி வந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இருவரையும் இன்று (செப்.10) கைதுசெய்ய வனத் துறையினர் அவர்கள் வேட்டையாடி வைத்திருந்த ஐந்து நீர்க்காகங்கள், இரண்டு நாட்டுத் துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: விருதுநகரில் வீட்டில் பட்டாசு தயாரித்தபோது வெடி விபத்து: ஒருவர் மரணம், 8 பேர் காயம்