திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. செங்கல்பட்டிலிருந்து சென்னை செல்லும் வரை, பல இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள், சரிவர இயங்காமல் இருந்ததால் தொடர் விபத்துகள் ஏற்பட்டு வந்தன. இதுகுறித்து நமது ஈடிவி பாரத் ஊடகத்தில் செய்தி வெளியாகியிருந்தது.
அதனைத்தொடர்ந்து தற்போது, மறைமலை நகர், சிங்கப்பெருமாள் கோவில் போன்ற பல இடங்களில் உள்ள போக்குவரத்து சிக்னல்களை சீரமைக்கும் பணி தொடங்கி உள்ளது.