செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டுத் தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாரா ஒலிம்பிக் சர்வதேச விளையாட்டு வீரரும், முதல் இந்திய சக்கர நாற்காலி ஓட்டப்பந்தய வீரர் விஜயசாரதி கலந்துகொண்டார்.
அப்போது 'உடலினை உறுதி செய்' என்ற தலைப்பில் அவர் பேசுகையில், ”பள்ளி என்பது படிப்பதற்கு மட்டுமான இடமல்ல. அது நிறைய நல்ல விஷயங்களை கற்றுக்கொள்ளும் வளாகமாகும். வாழ்க்கையில் படிப்பும் விளையாட்டும் ஒருசேர கொண்ட மாணவர்களுக்கு நிதானம் இருக்கும்.
பெற்றோர் தங்கள் மனக்குறைகளைத் தயவுசெய்து குழந்தைகளிடம் திணிக்காதீர்கள். அது அவர்களுடைய எதிர்காலத்திற்கு உகந்தது அல்ல. மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள். குரு என்றாலே தெய்வம்தான். நான் ஒரு நல்ல விளையாட்டு வீரரானதற்குக் காரணம் என் ஆசிரியர்தான். ஒரு நல்ல ஆசிரியரின் வழிகாட்டுதலே ஒரு நல்ல வீரரை உருவாக்கும்” என்றார்.
இதையும் படிங்க... பால் விலையை குறைக்க பால்முகவர் சங்கம் கோரிக்கை