செய்யூர் வட்டம் ஈசூர் கிராமத்தைச் சேர்ந்த நவீன் குமாரும் கடலூர் மாவட்டம் உண்ணாமலை செட்டி அய்யன் நகர் பகுதியைச் சேர்ந்த பவித்ரா என்பவரும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் நவீன் குமாரை காதலிப்பதாக தனது வீட்டில் பவித்ரா தெரிவித்துள்ளார்.
இவர்களுடைய காதலுக்கு தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்த பெண் வீட்டார், பவித்ராவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்ய நிச்சயித்துள்ளனர். தான் காதலிப்பது தெரிந்தும் வேறு ஒருவருடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்ததால் வீட்டை விட்டு கடந்த 9ஆம் தேதி வெளியேறிய பவித்ரா, இன்று சென்னையில் வைத்து நவீன் குமாரை திருமணம் செய்துகொண்டார்.
தொடர்ச்சியாக பெண் வீட்டார் கொலை மிரட்டல் விடுத்து வரவே, மாலையும் கழுத்துமாய் செங்கல்பட்டு மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: சாதி மறுப்புத் திருணம் செய்த தம்பதிகளை கடத்தி தாக்குதல்!