செங்கல்பட்டு: பல்லாவரம் ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள பல்லாவரம் புதிய மேம்பாலத்தை இரு வழிச்சாலையாக மாற்ற வேண்டும், பல்லாவரம் ஜி.எஸ்.டி. சாலை மற்றும் இந்திரா காந்தி சாலை இணைப்பில் உள்ள தடுப்பை அகற்றி சிக்னல் அமைக்க நெடுஞ்சாலைத்துறை பணம் வழங்கியும் போக்குவரத்து காவல்துறை சிக்னல் அமைக்கவில்லை.
பொது மக்களுக்கு இடையூறாக உள்ள சாலைத்தடுப்பை அகற்றிடக்கோரியும் சிபிஐஎம், சி.ஐ.டி.யூ, மாதர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 15 நிமிடங்கள் நீடித்த மறியல் போராட்டத்தால் ஜி.எஸ்.டி.சாலையில் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது.
பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்த போலீசார் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆன்லைனில் விஷம் வாங்கிக்குடித்து கல்லூரி மாணவர் தற்கொலை!