ETV Bharat / state

செங்கல்பட்டில் 60 பைக்குகளை திருடி சகாய விலைக்கு விற்ற நபர் கைது!

author img

By

Published : Apr 8, 2023, 5:13 PM IST

இரு சக்கர வாகனங்களைத் திருடி நரிக் குறவர்களுக்கு குறைந்த விலையில் விற்று நூதன சமூக சேவை செய்து வந்த கில்லாடித் திருடனை போலீசார் கைது செய்து, 50 லட்சம் மதிப்புள்ள 60 பைக்குகளை மீட்டனர்.

60 பைக்குகளைத் திருடிய பலே திருடன் கைது
60 பைக்குகளைத் திருடிய பலே திருடன் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தின் பல பகுதிகளிலும், குறிப்பாக மேல்மருவத்தூர், அச்சிறுப்பாக்கம் பகுதிகளில் இரு சக்கர வாகனங்களின் திருடு போவது குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதனை அடுத்து மாவட்ட எஸ்.பி பிரதீப், மேல் மருவத்தூர் ஆய்வாளர் பிரேம் ஆனந்த் மற்றும் சித்தாமூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மோகன சுந்தரம் ஆகியோர் தலைமையில், தனிப்படை ஒன்றை அமைத்து, தீவிர வாகன சோதனைக்கும் கண் காணிப்புக்கும் உத்தரவிட்டிருந்தார்.

சூணாம்பேடு காவல் எல்லைக்கு உட்பட்ட வில்லியம்பாக்கம் பகுதியில் தனிப் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்த போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் இருச்சக்கர வாகனத்தில் வந்த ஒருவரை மடக்கி விசாரணை செய்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணாகத் தகவல் அளித்ததால் போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் அவர் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பது தெரியவந்தது.

மேலும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இரு சக்கர வாகனங்களைத் திருடி வந்ததும் தெரியவந்தது. இவர் மீது பல்லாவரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் பதிவாகி இருப்பதும் தெரிந்தது. இரு சக்கர வாகனங்களைத் திருடிய விஜயகுமார், அவற்றை நரிக் குறவர்கள் மற்றும் அதிகம் கேள்வி கேட்காத பாமர மக்களிடம் குறைவான விலைக்கு விற்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.விஜயகுமார் கொடுத்த தகவலின் அடிப்படையில் சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்ற தனிப் படையினர் இவர் திருடி விற்றிருந்த வாகனங்களை மீட்டு உள்ளனர். சுமார் 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள 60 இருசக்கர வாகனங்கள் தனிப் படையினரால் மீட்கப்பட்டது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப், "வாகனத் திருட்டைத் தடுக்க அமைக்கப்பட்ட தனிப்படையினர், சிறப்பாகச் செயல்பட்டுக் குறுகிய காலத்தில் அறுபது இரு சக்கர வாகனங்களை மீட்டதோடு குற்றவாளியையும் கைது செய்துள்ளனர்.அவர்களைப் பாராட்டுகிறேன். பொதுமக்கள் தங்கள் இரு சக்கர வாகனத்தைப் பாதுகாப்பான இடங்களில் நிறுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆள் நடமாட்டம் அற்ற இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்களே விஜயகுமார் போன்ற திருடர்களின் இலக்காக உள்ளது. எனவே இரு சக்கர வாகனங்களைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள டூவீலர் நிலையம் போன்ற பாதுகாப்பான இடங்களில் மட்டுமே பொதுமக்கள் தங்கள் இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டுச் செல்ல வேண்டும்.

இரு சக்கர வாகனங்கள் திருடு போனால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் பட்சத்தில், உடனடியாக மனு ஏற்பு ரசீது எனப்படும் சி.எஸ்.ஆர் அளிக்கப்பட்டு அதன் பின்னர் முதல் தகவல் அறிக்கையும் அளிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்று கூறினார்.

முன்னதாக தனிப் படையினரால் மீட்கப்பட்ட 60 இருசக்கர வாகனங்களையும் பிரதீப் பார்வையிட்டார். காவல் துறை விரைந்து செயல் பட்டு 60 இரு சக்கர வாகனங்களையும் மீட்ட செயல் மக்களிடையே வரவேற்கத்தக்கதாகவும், பாராட்டும் வகையிலும் அமைந்து உள்ளது.

இதையும் படிங்க: "சட்டம் மனிதாபிமானத்தை தொடும் வகையில் இருக்க வேண்டும்" - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.