செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் ஏழு பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதையடுத்து மண்டப தெரு, காந்தி நகர், ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட பகுதிகளில் தீவிரமாக பாதுகாப்பு பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இதனால் அத்தியாவசிய பொருள்களை மக்கள் வாங்குவதற்காக திண்டிவனம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக கடைகள் அமைக்க வேண்டி நகராட்சி அலுவலர்கள் கேட்டுக்கொண்டனர். ஆனால் இப்பகுதி அதிக தொலைவில் இருப்பதால் பொதுமக்கள் யாரும் காய்கறிகள் வாங்க வருவதில்லை என வியாபாரிகள் கூறுகின்றனர்.
மக்கள் எளிதில் வரக்கூடிய கடப்பேரி பகுதியில் அரசுக்கு சொந்தமான உழவர் சந்தை கட்டடம் உள்ளது. ஆனால் அது பயன்பாட்டில் இல்லை. ஆகவே அங்கு கடைகள் அமைத்தால் மக்களும் எளிதாக வருவார்கள் எனவும் சந்தையில் கடை அமைத்தவர்களுக்கும் வியாபாரம் நடக்கும் என வியாபாரிகள் நகராட்சி அலுவலர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: குறைந்த விலையில் காய்கறிகள் விற்றும், மக்கள் வராததால் வியாபாரிகள் வேதனை