செங்கல்பட்டு மாவட்டம். வல்லான் சேரி, கீழ்கர்ணை, மல்ரோசபுரம், திருக்கச்சூர் உள்ளிட்ட பகுதிகளில், அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அவருக்கு அதிமுக, கூட்டணிக் கட்சி தொண்டர்கள் ஆகியோர் பட்டாசு வெடித்து, சால்வை அணிவித்து சிறப்பான வரவேற்பளித்தனர்.
தொடர்ந்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட கஜேந்திரன் பேசுகையில், “ 1998ஆம் ஆண்டு ஒரு சாதாரண உறுப்பினராக அதிமுக கட்சியில் சேர்ந்த நான், தற்போது சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராக நியமிக்கப்படும்வரை வளர்ந்திருக்கிறேன். இதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமே காரணம்.
நான் வெற்றி பெற்றால் தொகுதி மக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்ட உதவிகளையும் கொண்டுவந்து சேர்ப்பதில் முழுமூச்சாக செயல்படுவேன்” என்றார்.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி ஒரு விஷப்பாம்பு! - மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்!