ETV Bharat / state

'தடுப்பூசி நிறுவனத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும் என்பதே முதலமைச்சரின் விருப்பம்' - minister m subramaniyan

செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனத்தை அரசு ஏற்று நடத்தவேண்டும் என்பதே முதலமைச்சரின் விருப்பம் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

minister m subramaniyan  Chengalpattu vaccine company
செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும் என்பதே முதல்வரின் விருப்பம்
author img

By

Published : May 26, 2021, 3:18 PM IST

திருநெல்வேலி: நெல்லை மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்ய வந்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், கூடங்குளம் அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை, தடுப்பூசிப் போடும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக்குப் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கூடங்குளம் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் விரைவில் மகப்பேறு சேவை மையம் செயல்படும்.

கூடங்குளம் அணு உலை அமைந்துள்ள பகுதியில் தடுப்பூசி சிறப்பு முகாம் நாளை முதல் செயல்படும். தமிழ்நாட்டில் ஒரே நாளில் 2 லட்சத்து 53 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக 75 லட்சம் பேர் தடுப்பூசி எடுத்துள்ளனர். தடுப்பூசி செலுத்துவதில் கிராமப்புறங்களில் அதிக கவனம் செலுத்த முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

தடுப்பூசிப் போடும் பணிகளுக்காக மருத்துவம் சார்ந்த 3,700 பணியாளர்கள்; 2,100 மருத்துவர்கள், 6,000 செவிலியர் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் மருத்துவர்கள் விருப்பத்திற்கேற்ப இடமாறுதல் நடைபெற்றுள்ளது.

ஊரடங்கு தமிழ்நாடு அரசின் நடவடிக்கையின் காரணமாக, கரோனா தொற்று 10 விழுக்காடு குறைந்துள்ளது. செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை அரசு ஏற்று நடத்தவேண்டும் என்பதுதான் முதலமைச்சரின் விருப்பம். இது நடந்தால் தமிழ்நாட்டிற்கு விடிவு காலம் ஏற்படும்" என்றார்.

இதையும் படிங்க: கூடங்குளம் அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.