செங்கல்பட்டு மாவட்டம் ஈசூரைச் சேர்ந்தவர்கள் சந்தோஷ்(16), விக்கி (16). இருவரும் ப்ளஸ் ஒன் படித்து வரும் மாணவர்கள். தற்போது கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், சிறுவர்கள் இருவரும் இருசக்கர வானத்தை எடுத்துக்கொண்டு, அருகிலிருந்த வள்ளிபுரம் கிராமத்தில் இருக்கும் உறவினர்களைச் சந்தித்து விட்டு வீடு திரும்பியுள்ளனர்.
அப்போது பாலாறு அருகே எதிரே வேகமாக வந்த மினிலாரி ஒன்று சிறுவர்கள் வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துகுள்ளானது, இந்த விபத்தில், பலத்த காயமடைந்த சந்தோஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் மற்றோரு சிறுவன் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்ததோடு, தலைமறைவான மினிலாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: பைக் மீது கார் மோதிய விபத்தில் தந்தை மகள் படுகாயம்: கொலை சதியா என போலீஸ் விசாரணை!