தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில் நடிகை ரம்யா பாண்டியன் அவரது கணவருடன் சென்று சுவாமி தரிசனம் செய்தார். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் சிறந்த பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது.
இதனால் கோயிலுக்கு வரும் மக்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சியினர் முக்கிய பிரமுகர்கள் கோயிலுக்கு வந்து பரிகாரம் செய்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் நடிகையும், தொலைக்காட்சி பிரபலமான ரம்யா பாண்டியனுக்கு லவால் தவான் என்பவருடன் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.
இதனையடுத்து ரம்யா பாண்டியன் தனது கணவர் யோகா மாஸ்டரான லவால் தவானுடன் திருச்செந்தூர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். கோயிலுக்கு செல்வதற்கு முன்னதாக ரம்யா பாண்டியன் தனது கணவருடன் தனியார் விடுதிக்கு சென்ற போது கோயிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு தனியார் விடுதியில் இருந்து புறப்பட்டுச் சென்ற நகைச்சுவை நடிகர் சூரியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இதையும் படிங்க: ”சூர்யாவை விமர்சிப்பது தவறு; சினிமாக்காரர்களை மட்டும் குறி வைப்பது ஏன்?” - இயக்குநர் இரா.சரவணன் கேள்வி!
இதனையடுத்து புதுமண தம்பதிகளான ரம்யா பாண்டியன் மற்றும் அவரது கணவருக்கு நடிகர் சூரி வாழ்த்து தெரிவித்தார். முன்னதாக சென்னையில் நடைபெற்ற நடிகை ரம்யா பாண்டியன், லவால் தவான் திருமண வரவேற்பு நிகழ்வில் சினிமா பிரபலங்கள், தொலைக்காட்சி பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்