ETV Bharat / international

டிரம்ப்பின் 2.0 ஆட்சியில் இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் வெளியுறவுக்கொள்கை எப்படி இருக்கும்?

2025ஆம் ஆண்டு ஜனவரியில் அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்க உள்ள நிலையில், சர்வதேச அரசியல் களம் உறுதியானதாகவும் அதே சமயம் கணிப்புக்கு அப்பாற்பட்டும் இருக்கிறது.

டொனால்டு டிரம்ப்
டொனால்டு டிரம்ப் (Image credits-AP)
author img

By Vivek Mishra

Published : 3 hours ago

ஹைதராபாத்: 2025ஆம் ஆண்டு ஜனவரியில் அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்க உள்ள நிலையில், சர்வதேச அரசியல் களம் உறுதியானதாகவும் அதே சமயம் கணிப்புக்கு அப்பாற்பட்டும் இருக்கிறது. நெருங்கிய வட்டாரத்தில் உள்ள நம்பிக்கையானவர்களைக் கொண்டு அமெரிக்காவின் கொள்கையை மறுவடிவமைப்பு செய்வதில் டிரம்ப் உறுதியோடு இருக்கிறார் என்பது திட்டமிட்டு உறுதியான முறையில் தமது குழுவுக்கு அவர் ஆட்களை நியமிப்பதன் மூலம் வெளிப்படுகிறது.

வெளியுறவுத்துறை அமைச்சராக மார்கோ ரூபியோ, தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மைக்கேல் வால்ட்ஸ், பாதுகாப்புத்துறை அமைச்சராக பீட் ஹெக்செத், தேசிய உளவுத்துறை இயக்குநராக துளசி கபார்ட், சுகாதாரத்துறை அமைச்சராக ராபர்ட் எஃப் கென்னடி ஜூனியர் ஆகியோரை முக்கியமான துறைகளில் டிரம்ப் நியமித்திருக்கிறார். எலான் மஸ்க், விவேக் ராமசாமி ஆகியோர் புதிதாக உருவாக்கப்பட்ட அரசின் திறன் துறையில் நியமிக்கப்பட்டிருப்பது வியக்கத்தக்கதாக உள்ளது. இதையெல்லாம் பார்க்கும் போது உள்நாட்டிலும், உலக அளாவிய அரங்கிலும் ஒட்டு மொத்தமாக மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற அவரது வலுவான குறிக்கோளை வெளிப்படுத்துகிறது. ஆகவே, முக்கிய சர்வதேச நாடுகளுடன் எந்தமாதிரியான அணுமுறை இருக்கும், புதிதாக பதவி ஏற்க உள்ள டிரம்ப் நிர்வாகம் என்னமாதிரியான வெளியுறவுக் கொள்கையை முன்னெடுக்கப்போகிறது, வரும் மாதங்களில் உலகம் என்ன எதிர்பார்க்கலாம்.

டிரம்ப் நிர்வாகம் சில விஷயங்களை தெளிவுபடுத்தியுள்ளது. பணவீக்கம், குடியுரிமை, வர்த்தகம் ஆகிய அமெரிக்காவின் உள்நாட்டு பிரச்னைகளை முதன்மையாக கொண்டே வெளியுறவுக்கொள்கை வகுக்கப்பட உள்ளது. இந்த விஷயங்கள் ஒவ்வொன்றும் எல்லைகளில், சர்வதேச உறவுகளில், கூட்டணிகளில் , சிக்கல்களில் கூட எதிர்வினையை உருவாக்கக் கூடியவையாக உள்ளன. ஐரோப்பாவில் ரஷ்யா-உக்ரைன் இடையேயான மோதல், இஸ்ரேல்-ஹமாஸ் இடையே மத்திய கிழக்கில் நடக்கும் மோதல் ஆகிய நடைபெற்று வரும் இந்த இரண்டு போர்கள் குறித்த பிரச்னைகளில் டிரம்ப் கவனம் செலுத்தக் கூடும்.

ரஷ்யா

ரஷ்யாவை பொறுத்தவரை ஒரு அழுத்தமான வெளியுறவுக் கொள்கைக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் டிரம்ப் நிர்வாகம் செயல்படும். தற்போதைய உக்ரைன் மோதலை ஒரு முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வலுவான உந்துதலை ஆரம்ப சமிக்ஞைகள் சுட்டிக்காட்டுகின்றன. மேலும் பதற்றத்தை தணிக்கும் வகையில், கிழக்கு ஐரோப்பாவை வலுப்படுத்துவதற்கான ஒரு தீர்வை எட்டும் வகையில் மாஸ்கோவுடன் தூதரக ரீதியிலான நடவடிக்கைகள் மேற்கொள்ள டிரம்ப் குழுவினர் தயாராக இருப்பதாக தெரிகிறது. போரை முடிவுக்கு கொண்டு வருவதன் மூலம் சர்வதேச எரிசக்தி சந்தை வலுப்பெறும், நிர்வாகத்தில் முக்கியமாக உள்நாட்டு தேவையைக் கருத்தில் கொண்டு பணவீக்க அழுத்தங்களைக் குறைத்தல் ஆகிய இரண்டு முதன்மை நோக்கங்களில் டிரம்ப் நிர்வாகம் கவனம் செலுத்துகிறது

ரஷ்ய அதிபர் புதின்
ரஷ்ய அதிபர் புதின் ((Image credits-AP))

இதையும் படிங்க : 'நானும், எலான் மஸ்க்கும் வீழ்ச்சியடைந்து வரும் இந்த நாட்டை காப்பாற்ற போகிறோம்' - விவேக் ராமசாமி சூளுரை

எனினும், இதில் அபாயம் இல்லாமல் இல்லை. மாஸ்கோ உடனான தீவிரமான கொள்கைகளால், ரஷ்யாவுக்கு ஆதரவான மிகையான சமரச முயற்சிகள் அமெரிக்காவின் ஐரோப்பிய கூட்டாளிளுடன் சிக்கலை ஏற்படுத்தலாம். அவர்களில் பலர் மாஸ்கோவின் ஆக்கிரமிப்புக் கொள்கைகளைத் தடுக்க ஒரு உறுதியான நிலைப்பாட்டை ஆதரிக்கின்றனர்.நேட்டோ போன்ற அமைப்புகளின் வாயிலாக இல்லாமல் நேரடியான பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்பது டிரம்ப்பின் நோக்கமாக இருக்கிறது. இது கூட்டணி நாடுகளின் செயல்பாட்டின் அடிப்படையில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும்.

ஒருவேளை டிரம்ப் வெற்றிகரமாக அமைதி முயற்சியை முன்னெடுத்தால், தீவிரவாதத்துக்கு எதிரான செயல்பாடுகள் அல்லது எரி சக்தி ஆகியவற்றில் புதிய வாய்ப்புகள் ஏற்படக்கூடும் என்பதால், இது அமெரிக்கா-ரஷ்யா இடையேயான உறவில் ஒரு மறு வடிவமைப்பை உருவாக்கும். எனினும் நேட்டோ உறுப்பு நாடுகள் மத்தியில் நம்பிக்கை குறைவை ஏற்படுத்தும், கூட்டு பாதுகாப்பில் அமெரிக்காவின் கடமை குறித்த கவலைகளையும் கொண்டிருக்கும். சவாலான நிலைக்கு இடையே நடுநிலை வகிப்பது டிரம்ப் நிர்வாகத்துக்கு முக்கியமானதாக இருக்கும்.

சீனா

டிரம்ப்பின் வெளியுறவுக்கொள்கையில் சீனா தொடர்ந்து மிகவும் சிக்கலான சர்ச்சைக்குரிய அம்சமாகவே இருந்து வருகிறது. எனவே இருநாடுகளுக்கு இடையே மோதல் போக்கான நிலையே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராணுவ நிலைப்பாட்டை விடவும் பொருளாதார நடவடிக்கைகளை நோக்கியதாக இருக்கலாம். சர்வதேச விநியோக கட்டமைப்பில் சீனாவின் தாக்கத்தை குறைக்கும் வகையில், சீனாவின் பொருளாதார உயர்வுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தொழில்நுட்ப தடைகள், வர்த்தக தடைகள், வரிகளை உயர்த்துதல் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்று டிரம்ப் குழுவினர் குறிப்பாக தெரிவித்துள்ளனர்.

சீன அதிபர் ஜி ஜின்பிங்க்
சீன அதிபர் ஜி ஜின்பிங்க் (Image credits-AP)

செமிகண்டக்டர்கள், அரிய வகை கனிமங்கள் போன்ற சிக்கலான வளங்களை பாதுகாப்பாக அணுகுதல் போன்றவற்றில் நவீன தொழில்நுட்ப கட்டமைப்பு உள்ளிட்டவற்றின் கட்டுப்பாடு ஆகிய முக்கிய பகுதிகளைக் கொண்டிருக்கும். சீனாவில் இருந்து இறக்குமதி செய்வதை சார்ந்திருப்பதை குறைத்து உள்நாட்டில் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற டரம்ப்பின் நீண்டகால கோரிக்கையை பிரதிபலிக்கும் வகையிலான அணுகுமுறை இருக்கும். எனினும் இந்த உத்தி குறிப்பிடத்தக்க அபாயத்தைக் கொண்டுள்ளது.

பல்வேறு அமெரிக்க நட்பு நாடுகளுடன் சீனா முக்கிய வர்த்தக கூட்டாளியாக உள்ளது. எனவே அந்த நாட்டுடன் பொருளாதார மோதலை தீவிரப்படுத்துவது சர்வதேச சந்தையை வலுவிழக்கச் செய்யும். எனவே, இந்த விஷயத்தில் மென்மையான சமநிலைப் போக்கை கடைபிடிக்க வேண்டிய தேவையில் டிரம்ப் நிர்வாகம் உள்ளது. கூட்டாளிகளை அந்நியப்படுத்தாமல் அல்லது பரந்த பொருளாதார மந்தநிலையை தூண்டாமல் பொருளாதார இலக்குகளை முன்னெடுக்க வேண்டும். அதே நேரத்தில் இந்த கவனமான அணுகுமுறை, சீனாவின் பொருளாதார, தொழில்நுட்ப ஆதிக்கத்தின் கவலைகளைக் கொண்டுள்ள நாடுகளுடன் கூட்டாண்மையை கட்டமைப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும். ஐரோப்பா, ஆசியா மற்றும் அதனை தாண்டியும் கூட்டணி நாடுகளுடன் ஒத்துழைப்பு என்பது சீனாவின் நோக்கங்களை தடுத்து டிரம்ப் நிர்வாகம் அதன் நடவடிக்கைகளின் தாக்கத்தை அதிகரிக்க முடியும், மேலும் ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்க முடியும்.

இந்தியா மற்றும் இந்தோ-பசிபிக்

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தைப் பொறுத்தவரை பிராந்திய நாடுகளுக்கு இடையே சுமைகளை பகிர்ந்து கொள்ளுதல் என்ற எளிதான வசதியான பரஸ்பர ஒத்துழைப்பு உத்தியை டிரம்ப் நிர்வாகம் மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம். இந்திய வளைகுடா பகுதியில் சீனாவின் வளர்ந்து வரும் ஆதிக்கத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த பிராந்தியத்தில் இந்திய கடற்படையின் பாதுகாப்பை விரிவாக்குவது உள்ளிட்ட மேலும் ஊக்கமான நடவடிக்கைகளில் ஈடுபடும்படி இந்தியாவை டிரம்ப் நிர்வாகம் ஊக்குவிக்கும்.

பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்
பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் (Image credits-AP)

கூட்டணி நாடுகள் மற்றும் கூட்டாண்மை நாடுகளுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலம் அமெரிக்கா நேரடியாக பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களில் ஈடுபடுவதை குறைத்து டிரம்ப்பின் பிராந்திய கடமை என்ற தத்துவத்துக்கு ஏற்ப இருக்கும். ராணுவ ஒத்துழைப்பை விரிவாக்குவதில் கூட்டு ராணுவ பயிற்சிகள், தொழில்நுட்ப பகிர்வு ஒப்பந்தங்கள் போன்றவை இந்த கூட்டாண்மையின் அடித்தளமாக இருக்கும். அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான குவாட் அமைப்பு போன்ற முயற்சிகள் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் மேலும் வலுப்பெறக்கூடும்.

எனினும், இந்த உத்தியின் வெற்றி என்பது கவனமான பேச்சுவார்த்தைகளை சார்ந்தே இருக்கிறது. இந்தியா வரலாற்று ரீதியாகவே தனது உத்திப்பூர்வ சுயாட்சியை பாதுகாத்து வருகிறது. எனவே, மிகையாக பரிந்துரைக்கப்பட்ட அல்லது தவறானதாகக் கருதப்படும் முன்முயற்சிகளை தேசிய நலன் கருதி இந்தியா எதிர்க்கலாம். மேலும், இந்தியாவிடம் இருந்து ராணுவத்துக்கான செலவு அல்லது கடைமைகளை அதிகரிக்கக்கோரும் எதி்பார்புகள் பரஸ்பர ஒத்துழைப்புக்கான வரம்பை சோதிக்கும் வகையில் இருக்கும். இந்தியாவின் முன்னுரிமைகளுடன் அமெரிக்க நலன்களை சமநிலைப்படுத்துவது ஒரு நிலையான மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் கூட்டணியை வளர்ப்பதற்கு இன்றியமையாததாக இருக்கும்.

சர்வதே ஒழுங்கில் ஏற்படும் தாக்கம்

எனவே, சர்வதேச ஒழுங்கிற்கு இவை அனைத்தும் என்ன தாக்கத்தைக் கொண்டிருக்கும்? ரஷ்யாவுடனான தூதரக ரீதியிலான தீர்வுக்கான ட்ரம்பின் திறன், சீனாவிற்கு எதிரான பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் இந்தியா போன்ற பிராந்திய நாடுகளுக்கு பொறுப்புகளை மாற்றுவது - இவை அனைத்தும் அமெரிக்காவின் உலகளாவிய தடயத்தின் மறுசீரமைப்பைக் குறிக்கிறது. இது நிர்வாகம் கூட்டணி நாடுகள் மற்றும் வர்த்தக கூட்டாண்மைகளை மறுவரையறை செய்ய தயாராக உள்ளது, இது ஒரு புதிய சமநிலையை உருவாக்குகிறது.

அதே நேரத்தில் டிரம்ப்பின் அணுகுமுறை சர்வதேச ஒழுங்குக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று சிலர் கவலை கொள்கின்றனர். நீண்டகாலமாக தொடரும் சிக்கல்கள் கொண்ட விஷயங்களில் டிரம்ப் நிர்வாகம் வலுவான தீர்வை கொடுக்க முடியும் என்ற உணர்வும் இருக்கிறது. இந்த சிக்கலான சர்வதேச உறவுகளை நிர்வகிக்கும் போது டிரம்ப் தனது உள்நாட்டு முன்னுரிமைகளை திறமையாக வழிநடத்தினால், அமெரிக்கா ஒரு புதிய, குறைவான நேரடியான வழியில் அதன் உலகளாவிய செல்வாக்கை மறுபரிசீலனை செய்து, பொருளாதார ரீதியாக அதிக கவனம் செலுத்தும் சக்தியாக வெளிப்படும்.

Credits- ETV Bharat Tamil Nadu
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.