செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த பாலூர் டாஸ்மாக் கடையில், மேற்பார்வையாளராக பணிபுரிந்தவர் சுரேஷ் குமார். கடந்த வாரம் இவர் விற்பனைத் தொகையான சுமார் 7 லட்ச ரூபாயை எடுத்துக்கொண்டு, தனது வீடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது அம்மனூர் அருகே அவரை வழிமறித்த கொள்ளை கும்பல் ஒன்று, சுரேஷ் குமாரைக் கடுமையாகத் தாக்கிவிட்டு, அவரிடமிருந்த 7 லட்ச ரூபாய் ரொக்கப் பணத்தை பறித்துச் சென்றது. இதனையடுத்து கொள்ளையடித்துச் சென்றவர்களை செய்யூர் காவல் துறையினர் வலைவீசி தேடி வந்தனர்.
இதில் நயினார் குப்பம் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை(45), மடையம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன்(31), சூனாம்பேட்டைச் சேர்ந்த புருஷோத்தமன்(56), மரக்காணத்தைச் சேர்ந்த அப்பு என்கிற ராஜேஷ்(27), கந்தாடு பகுதியைச் சேர்ந்த ராகுல்(23), ராஜேஷ்(23) ஆகியோர் இக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து, காவல் துறையினர் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:செங்கல்பட்டில் டாஸ்மாக் ஊழியரைத் தாக்கி 7 லட்சம் ரூபாய் கொள்ளை!