தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் சார்பாக தொழில்முனைவோருக்கு 10 கோடிக்கும் மேலான கடனுதவி திட்டங்கள் வழங்கும் விழா இன்று (டிசம்பர் 28) செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.
விழாவில் கலந்து கொண்ட சிறு குறு தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசும்போது, "தொழில்துறையில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது.
தொழில் முனைவோருக்கான கடனுதவி வழங்குவதில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் உதவிகரமாக உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சீரிய முயற்சியால் தமிழ்நாடு 2 ட்ரில்லியனுக்கும் மேற்பட்ட பொருளாதாரத்தை நோக்கி விரைந்து முன்னேறுகிறது" என்றார்.
பின்னர் பேசிய மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத், "சிறு, குறு தொழில் நிறுவனங்கள்தான் அதிக வேலை வாய்ப்பை உருவாக்க முடியும். தற்போது மாணவர்களாக உள்ள அனைவரும், எதிர்காலத்தில் குறைந்தது, 50 முதல் நூறு பேருக்காவது வேலைவாய்ப்பு அளிக்கும் தொழில் முனைவோர்களாக மாற வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: Minister Sekar Babu speech: 'போற்றுவோர் போற்றட்டும், தூற்றுவோர் தூற்றட்டும், எங்கள் கடமை மக்கள் பணி செய்வதே..!'