சென்னை : சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் வரதராஜபுரம் 8ஆவது தெரு கிருஷ்ணா நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் பிரேம்குமார் (வயது 45). இவர், அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று (ஜன.7) காலை வழக்கம்போல் பணிக்கு சென்றுவிட்டு இரவு 10 மணி அளவில் அவரது வீட்டிற்கு வந்துள்ளார். இதையடுத்து, வீட்டின் கதவை தட்டியபோது யாரும் கதவைத் திறக்கததால் நீண்டநேரம் தட்டிப் பார்த்துவிட்டு பின்பு கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார்.
அப்போது படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் அவரது மனைவி சுகாசினி (38) மற்றும் 11 வயது மகன் பிரணித் ஆகியோர் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்து உள்ளனர்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பிரேம்குமார் இது குறித்து மணிமங்கலம் காவலர்களுக்கு தகவல் அளித்தார்.
இந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவலர்கள், தாய்- மகன் இருவரின் உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததனர்.
இதையடுத்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் பிரேம்குமாரின் மனைவி சுகாசினி கடந்த சில மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்டு மன அழுத்தத்தால் சிகிச்சை பெற்று வந்தது தெரியவந்தது.
இந்நிலையில், தாயும்-மகனும் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கு குறித்து காவலர்கள் பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்திவருகின்றனர். சுகாசினிக்கும் கணவருக்கும் இடையே ஏதேனும் பிரச்சினை இருந்தா? மகனை கொன்று சுகாசினி தற்கொலை செய்து கொண்டாரா என்று பல்வேறு கோணத்தில் வழக்கின் விசாரணை தொடர்கிறது.
இதையும் படிங்க : ஈரோடு மாவட்ட ஆட்சியர் கண்ணெதிரே தம்பதி தீக்குளிக்க முயற்சி