ETV Bharat / state

நர்ஸிங் கல்லூரியை திறக்கக் கோரி மாணவிகள் காத்திருப்பு போராட்டம்!

செங்கல்பட்டு: கல்பாக்கம் அருகே மூடப்பட்டிருக்கும் நர்ஸிங் கல்லூரியை திறக்க வலியுறுத்தி மாணவிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்பாக்கம் அருகே செவிலியர் கல்லூரி மூடி வைக்கப்பட்டுள்ளதை கண்டித்து மாணவிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

author img

By

Published : Mar 9, 2021, 7:50 AM IST

Updated : Mar 9, 2021, 9:16 AM IST

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே உள்ள கடலூர் கிராமத்தில் டெல்டா நர்ஸிங் பயிற்சி கல்லூரி அமைந்துள்ளது. கடந்த 2000ஆம் ஆண்டு தலித் கல்வி அறக்கட்டளை சார்பில் தொடங்கப்பட்ட, இந்தக் கல்லூரியில் மொத்தம் 62 மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இதில் சுற்றுப்புற கிராமங்களில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஏழ்மை நிலையில் இருக்கும் மாணவிகளே அதிகளவில் பயின்று வருகின்றனர். கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து கல்லூரிகளும் மூடப்பட்டன.

தற்போது அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட்டுவிட்ட நிலையில், இப்பகுதியில் இயங்கும் செவிலியர் கல்லூரி மட்டும் இன்றளவும் திறக்கப்படவில்லை. கல்லூரி திறக்கப்படாததால் தங்களின் எதிர்காலம் என்ன ஆகுமோ? என மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

இது குறித்து கல்லூரி நிர்வகத்திடம் பலமுறை கேள்வி எழுப்பியும், உரிய பதில் கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள் நேற்று (மார்ச்9) காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய பதில் கிடைக்கும் வரை போராட்டத்தை தொடரப்போவதாகவும் மாணவிகள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க : கமல் தலைமையில் உருவானது மூன்றாவது அணி!

Last Updated : Mar 9, 2021, 9:16 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.