செங்கல்பட்டு: தற்பொழுது நாடு முழுவதும் ஊழல் எதிர்ப்பு வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஊழலுக்கு எதிராக பொதுமக்கள் செய்ய வேண்டியவை, யாரை அணுகலாம், எப்படி அணுகலாம் போன்றவை குறித்து பொதுமக்களுக்கு எடுத்துச் சொல்லப்பட்டு வருகிறது.
இந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்திலும் ஊழல் எதிர்ப்பு வாரம் வித்தியாசமாகக் கொண்டாடப்படுகிறது. லஞ்ச ஒழிப்பு துறையின் துணை கண்காணிப்பாளர் இம்மானுவேல் ராஜசேகரன் ஆலோசனையின் படி, அலுவலர்கள் தெருக்கூத்து கலைஞர்களை வைத்து பொதுமக்களிடையே பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு, திருப்போரூர், திருக்கழுக்குன்றம் ஆகிய ஊர்களில், பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் இந்த விழிப்புணர்வு பரப்புரை நடைபெற்று வருகிறது. ஊழல் எதிர்ப்பு வாரம் விழிப்புணர்வை கதை வடிவில் தெருக்கூத்து கலைஞர்களை வைத்து செய்யப்படுவதால் பொதுமக்கள் பெரிதும் ரசித்து கவனிக்கின்றனர்.
இதையும் படிங்க: வணிகர்கள் கருத்தாய்வு கூட்டம்: தமிழ்நாட்டிற்கு வணிகம் செய்ய வழிவகை கிடைக்கும் - விக்கிரமராஜா