செங்கல்பட்டு: 'மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி தியானபீடம்' என்ற பெயரை தமிழ்நாட்டில் தெரியாதவரே இருக்க முடியாது. ஐப்பசி மாதம் தொடங்கினாலே, தமிழ்நாட்டில் சிவப்பு நிற ஆடையணிந்தவர்கள் அணிவகுப்பு செய்வதைப் போல, திரும்பும் திசையெங்கும் இருப்பர். மேல்மருவத்தூரில் சுயம்புவாக எழுந்தருளிய அம்மனின் அருளால் சுப்பிரமணியாக பிறந்து பங்காரு அடிகளாராக மாறியவருக்கே இப்புகழ் சென்றடையும்.
-
#WATCH | Tamil Nadu Governor RN Ravi today paid last respects to spiritual guru Melmaruvathur Bangaru Adigalar at his residence in Chengalpattu District pic.twitter.com/HXSUY8A8t3
— ANI (@ANI) October 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | Tamil Nadu Governor RN Ravi today paid last respects to spiritual guru Melmaruvathur Bangaru Adigalar at his residence in Chengalpattu District pic.twitter.com/HXSUY8A8t3
— ANI (@ANI) October 20, 2023#WATCH | Tamil Nadu Governor RN Ravi today paid last respects to spiritual guru Melmaruvathur Bangaru Adigalar at his residence in Chengalpattu District pic.twitter.com/HXSUY8A8t3
— ANI (@ANI) October 20, 2023
இவ்வாறாக பல சாதனைகளை செய்த பங்காரு அடிகளார் நேற்று மாரடைப்பால் செங்கல்பட்டில் உயிரிழந்தார். ஆன்மீகவாதியான பங்காரு அடிகளாரின் மறைவுக்கு உலகெங்கிலும் உள்ள அவரது பக்தர்கள் தங்களது சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து, பல அரசியல் தலைவர்களும், ஆன்மீக தலைவர்களும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். அந்த வகையில் பிரதமர் மோடி தனது X பக்கத்தில், 'பங்காரு அடிகளார் ஐயா அவர்களின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது.
-
ஸ்ரீ பங்காரு அடிகளார் ஐயா அவர்களின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. ஆன்மிகமும் கருணையும் நிறைந்த அவரது வாழ்க்கை என்றென்றும் பலருக்கு வழிகாட்டும் வெளிச்சமாக இருக்கும். மனித குலத்திற்கான தனது அயராத சேவை மற்றும் கல்விக்கான முக்கியத்துவத்தின் மூலம், அவர் பலரின் வாழ்க்கையில்… pic.twitter.com/odE6bFSOv6
— Narendra Modi (@narendramodi) October 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">ஸ்ரீ பங்காரு அடிகளார் ஐயா அவர்களின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. ஆன்மிகமும் கருணையும் நிறைந்த அவரது வாழ்க்கை என்றென்றும் பலருக்கு வழிகாட்டும் வெளிச்சமாக இருக்கும். மனித குலத்திற்கான தனது அயராத சேவை மற்றும் கல்விக்கான முக்கியத்துவத்தின் மூலம், அவர் பலரின் வாழ்க்கையில்… pic.twitter.com/odE6bFSOv6
— Narendra Modi (@narendramodi) October 19, 2023ஸ்ரீ பங்காரு அடிகளார் ஐயா அவர்களின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. ஆன்மிகமும் கருணையும் நிறைந்த அவரது வாழ்க்கை என்றென்றும் பலருக்கு வழிகாட்டும் வெளிச்சமாக இருக்கும். மனித குலத்திற்கான தனது அயராத சேவை மற்றும் கல்விக்கான முக்கியத்துவத்தின் மூலம், அவர் பலரின் வாழ்க்கையில்… pic.twitter.com/odE6bFSOv6
— Narendra Modi (@narendramodi) October 19, 2023
ஆன்மிகமும் கருணையும் நிறைந்த அவரது வாழ்க்கை என்றென்றும் பலருக்கு வழிகாட்டும் வெளிச்சமாக இருக்கும். மனித குலத்திற்கான தனது அயராத சேவை மற்றும் கல்விக்கான முக்கியத்துவத்தின் மூலம், அவர் பலரின் வாழ்க்கையில் நம்பிக்கை மற்றும் அறிவை விதைத்தார். அவரது பணி பல தலைமுறைகளுக்கு ஊக்கமளித்து வழிகாட்டும். அவரது குடும்பத்தினருக்கும் அபிமானிகளுக்கும் இரங்கல்களை தெரிவித்து கொள்வதாக' குறிப்பிட்டு இருந்தார்.
இவரைத்தொடர்ந்து, அமித்ஷா தனது X பக்கத்தில், 'மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தின் தலைவர் பத்மஸ்ரீ பங்காரு அடிகளார் அவர்களின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. அடிகளார் அவர்கள் ஆன்மீக நுண்ணறிவுகளுக்காக நன்கு அறியப்பட்டவர், அவரது ஆன்மீகம், சடங்கு நடைமுறைகளுக்கு அப்பாற்பட்ட ஒன்று. இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் பக்தர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
-
மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தின் தலைவர் பத்மஸ்ரீ பங்காரு அடிகளார் அவர்களின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. அடிகளார் அவர்கள் ஆன்மீக நுண்ணறிவுகளுக்காக நன்கு அறியப்பட்டவர், அவரது ஆன்மீகம், சடங்கு நடைமுறைகளுக்கு அப்பாற்பட்ட ஒன்று. இந்த துயரமான நேரத்தில் அவரது…
— Amit Shah (@AmitShah) October 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தின் தலைவர் பத்மஸ்ரீ பங்காரு அடிகளார் அவர்களின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. அடிகளார் அவர்கள் ஆன்மீக நுண்ணறிவுகளுக்காக நன்கு அறியப்பட்டவர், அவரது ஆன்மீகம், சடங்கு நடைமுறைகளுக்கு அப்பாற்பட்ட ஒன்று. இந்த துயரமான நேரத்தில் அவரது…
— Amit Shah (@AmitShah) October 19, 2023மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தின் தலைவர் பத்மஸ்ரீ பங்காரு அடிகளார் அவர்களின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. அடிகளார் அவர்கள் ஆன்மீக நுண்ணறிவுகளுக்காக நன்கு அறியப்பட்டவர், அவரது ஆன்மீகம், சடங்கு நடைமுறைகளுக்கு அப்பாற்பட்ட ஒன்று. இந்த துயரமான நேரத்தில் அவரது…
— Amit Shah (@AmitShah) October 19, 2023
இதுகுறித்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தலைவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், 'ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் நிறுவனர் பத்மஸ்ரீ பங்காரு அடிகளார் காலமானார் என்பதை அறிந்து வேதனை அடைந்தேன். 'அம்மா' என்று அன்புடன் அழைக்கப்பட்ட அவரது எளிமையும், மனித குல சேவையில் அயராத ஈடுபாடும் என்றென்றும் நினைவுகூரப்படும். துயரத்தின் இந்த நேரத்தில் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வேதனையைத் தாங்கும் சக்தியை எல்லாம் வல்ல இறைவன் அவர்களுக்குத் தரட்டும்' எனப் பதிவிட்டுள்ளார்.
-
Pained to learn about the passing away of Padma Shri Bangaru Adigalar Ji, the founder of Adhiparasakthi Spiritual Movement.
— Jagat Prakash Nadda (@JPNadda) October 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
His simplicity and relentless devotion to the service of humanity, for which he was affectionately called Amma, will be forever remembered. My heartfelt… pic.twitter.com/HD2Kxmb7JN
">Pained to learn about the passing away of Padma Shri Bangaru Adigalar Ji, the founder of Adhiparasakthi Spiritual Movement.
— Jagat Prakash Nadda (@JPNadda) October 19, 2023
His simplicity and relentless devotion to the service of humanity, for which he was affectionately called Amma, will be forever remembered. My heartfelt… pic.twitter.com/HD2Kxmb7JNPained to learn about the passing away of Padma Shri Bangaru Adigalar Ji, the founder of Adhiparasakthi Spiritual Movement.
— Jagat Prakash Nadda (@JPNadda) October 19, 2023
His simplicity and relentless devotion to the service of humanity, for which he was affectionately called Amma, will be forever remembered. My heartfelt… pic.twitter.com/HD2Kxmb7JN
இதேபோல, தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வெளியிட்ட X பதிவில், ''அம்மா' பங்காரு அடிகளாரின் மறைவால் வருத்தமடைந்தேன். பண்பட்ட ஆன்மா & சிறந்த ஆன்மிக குரு அவர். கல்வி, சுகாதாரம், சமூக சீர்திருத்தங்களுக்கான அவரது பங்களிப்புகள் என்றும் நம்மை ஊக்குவிக்கும். அவரது குடும்பத்தினருக்கும் பக்தர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்' என்று ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
வழிபாட்டு உரிமைகளில் புரட்சி செய்த ஆன்மீகப் பெரியவர் பங்காரு அடிகளார் அவர்களது திருவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினேன். pic.twitter.com/JQB3sHJr06
— M.K.Stalin (@mkstalin) October 20, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">வழிபாட்டு உரிமைகளில் புரட்சி செய்த ஆன்மீகப் பெரியவர் பங்காரு அடிகளார் அவர்களது திருவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினேன். pic.twitter.com/JQB3sHJr06
— M.K.Stalin (@mkstalin) October 20, 2023வழிபாட்டு உரிமைகளில் புரட்சி செய்த ஆன்மீகப் பெரியவர் பங்காரு அடிகளார் அவர்களது திருவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினேன். pic.twitter.com/JQB3sHJr06
— M.K.Stalin (@mkstalin) October 20, 2023
ஆன்மீகவாதி பங்காரு அடிகளாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு செய்யப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி, ஆன்மீகவாதியான பங்காரு அடிகளாரின் உடல் தமிழ்நாடு அரசின் முழு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க போலீசாரின் அணிவகுப்புடன் இன்று (அக்.20) மாலை 5:00 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக, பங்காரு அடிகளாரின் உடல் ஆதிபராசக்தி கோயிலி மாலை 4:00 மணி வரை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதற்காக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு திரண்ட நிலையில், பாதுகாப்பிற்காக வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் 2500 போலீசார் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் குவிக்கப்பட்டிருந்தனர். செவ்வாடை உடுத்தியபடி, அலைகடல் போல ஆதிபராசக்தி கோயிலில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்காரு அடிகளாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இறுதி சடங்கின் போது, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட பல தலைவர்கள் பங்காரு அடிகளாரின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதோடு, இந்த இறுதி சடங்கில் அமைச்சர் பொன்முடி, திமுக எம்.பி ஜெகத்ரட்சகன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பலரும் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: "சனாதனம் தவிர்த்து சமத்துவம்" - பங்காரு அடிகளாரை பாராட்டிய திருமாவளவன்