செங்கல்பட்டு: கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளி மாணவிகளை பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கியதாக பள்ளி உரிமையாளர் சிவசங்கர் பாபா மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
சிவசங்கர் பாபா மீது போக்சோ பிரிவின் கீழ் மூன்று வழக்குகள் பதியப்பட்டன. இதுகுறித்த விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. தலைமறைவாக இருந்த சிவசங்கர் பாபா கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சிவசங்கர் பாபாவின் அறையில் நடத்தப்பட்ட சோதனையில் பல முக்கிய ஆதாரங்கள் கிடைத்ததாகக் கூறப்படுகிறது. வழக்குகளின் விசாரணை செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன.
இந்நிலையில் சிவசங்கர் பாபாவிற்கு இரண்டு போக்சோ வழக்கில் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால் ஜாமீன் கிடைத்தும் சிவசங்கர் பாபா சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சாட்சியமே போதும் - உயர் நீதிமன்றம் விளக்கம்