ETV Bharat / state

மாரியம்மன் கோயில் பாம்பு புற்று இடிப்பு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை! - Mariamman Temple Snake Pit Demolition

செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் அருகேயுள்ள தண்டு மாரியம்மன் கோயிலில் உள்ள புற்றை இடித்து ஐந்து நல்ல பாம்புகளை கொன்ற நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தண்டு மாரியம்மன் கோயில்  செங்கல்பட்டு தண்டு மாரியம்மன் கோயில்  மாரியம்மன் கோயில் புற்று இடிப்பு  பாம்புகள் உயிரிழப்பு  Mariamman Temple Snake Pit Demolition Action Request  Mariamman Temple Snake Pit Demolition  Chengalpattu Thandu Mariamman Temple
Mariamman Temple Snake Pit Demolition Action Request
author img

By

Published : Jan 5, 2021, 11:36 AM IST

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அருகே 50 வருடங்களுக்கு மேற்பட்ட பழமை வாய்ந்த ஸ்ரீ தண்டு மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. அதனருகே மக்கள் வழிபடும் வகையில் புற்றும் அமைந்திருந்தது.

பாம்புகள் உயிரிழப்பு

இதனிடையே கோயிலுக்கு அருகேயுள்ள நிலத்தின் உரிமையாளரான செந்தில் என்பவர் தன் நிலத்திற்கு எதிரே உள்ள கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதற்காக ஜேசிபி இயந்திரம் மூலம் இடத்தை சமன் செய்துள்ளார். இதில், கோயிலுக்கு அருகேயுள்ள புற்று இடிக்கப்பட்டது. இதனால், அவற்றிலிருந்த ஐந்துக்கும் மேற்பட்ட நல்ல பாம்புகள் உயிரிழந்தன.

தண்டு மாரியம்மன் கோயில்  செங்கல்பட்டு தண்டு மாரியம்மன் கோயில்  மாரியம்மன் கோயில் புற்று இடிப்பு  பாம்புகள் உயிரிழப்பு  Mariamman Temple Snake Pit Demolition Action Request  Mariamman Temple Snake Pit Demolition  Chengalpattu Thandu Mariamman Temple
உயிரிழந்த நல்ல பாம்பு

தெய்வக்குற்றம்

புற்றை இடிக்க வேண்டாம் என பொதுமக்கள் வலியுறுத்தியும் செந்தில் கேட்காமல், புற்றை இடித்ததால் பொதுமக்கள் பெரும் கோபத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் தெய்வ குற்றம் ஏதும் நேர்ந்துவிடுமோ என பயத்திலும் உள்ளனர்.

நடவடிக்கை

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ”புற்றை இடித்ததற்காக செந்திலுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும். காவல் துறை, விலங்கு பாதுகாப்பு துறை இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தனிநபர் ஆக்கிரமிப்பால் இடிக்கப்பட்ட பாம்பு புற்று

இதையும் படிங்க: பாம்பு கடித்த நபரை விரைந்து காப்பாற்றிய காவலர்கள் - குவியும் பாராட்டுகள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.