செங்கல்பட்டு: அச்சிருப்பாக்கம் அடுத்த இந்தலூரைச் சேர்ந்தவர் சிலம்பரசன். இவருக்கும் வைத்தீஸ்வரி என்பவருக்கும், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக திருமணம் நடந்தது. சிலம்பரசன், தனது தந்தை கிருஷ்ணமூர்த்தி, தாய் பவானியோடு இந்தலூரில் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.
வீட்டின் கீழ் தளத்தில் சிலம்பரசனின் பெற்றோர் வசிக்க, வீட்டின் மேற்புறத்தில் கூரை அமைத்து, சிலம்பரசன் தனது மனைவி வைத்தீஸ்வரியோடு வசித்து வந்துள்ளார். குடும்பப் பிரச்சினை காரணமாக சிலம்பரசன் தனது பெற்றோருடன் பேசுவதில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று (மார்ச் 03) அவர்கள் வீட்டிலிருந்து துர்நாற்றம் எழுந்துள்ளது. சிலம்பரசனின் தாயார் மேலே சென்று பார்த்தபோது, வைத்தீஸ்வரி அழுகிய நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்து கிடந்த வைத்தீஸ்வரியின் அருகில், வயலுக்குத் தெளிக்கும் பூச்சிக் கொல்லி மருந்து இருந்துள்ளது. அவரது கணவர் சிலம்பரசனையும் மூன்று நாள்களாகக் காணவில்லை. எனவே, இது தற்கொலையா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: Watch Video: ஜெராக்ஸ் கடையில் செல்போன் திருட்டு