ETV Bharat / state

சமூக நல்லிணக்க பெரியாரே... பிரதமர் மோடியை வாழ்த்தி பாஜகவினர் போஸ்டர் - PM modi mentioned as social harmony Periyar

செங்கல்பட்டு மாவட்டத்தில், சமூக நல்லிணக்க பெரியாரே என பிரதமர் மோடியைக் குறிப்பிட்டு போஸ்டர் ஒட்டி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

Modi periyar
Modi periyar
author img

By

Published : Sep 16, 2022, 8:47 PM IST

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட, பல்லாவரம் நகர (வடக்கு) பாஜக சார்பாக பிரதமர் மோடி குறித்து ஒட்டப்பட்டு இருக்கும் போஸ்டருக்கு இணையத்தில் கண்டனங்கள் எழுந்துள்ளன.

போஸ்டரில் 'சமூக நல்லிணக்க பெரியாரே' என பிரதமர் மோடியை குறிப்பிட்டும், பெரியார் எழுத்துகளுக்கு பாஜகவின் வண்ணமிட்டு வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் தங்களை வாழ்த்தவயதில்லை வணங்குகின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

சித்தாந்த ரீதியாக தினந்தோறும் மோதிக்கொள்ளும் பாஜகவினருக்கும் - திமுகவினருக்கும் இந்த போஸ்டர் அதிர்ச்சியை அளித்துள்ளது. திமுக தொண்டர்கள் இதற்கு கண்டனங்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். அதே சமயம் தொடர்ச்சியாக பெரியாரை விமர்சித்து வரும் பாஜகவினர், தற்போது மோடியை பெரியார் எனக் குறிப்பிட்டு போஸ்டர் அடித்து இருப்பது அக்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: "அம்பேத்கரும் மோடியும்" நூல் வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.