செங்கல்பட்டு மாவட்டம் படாளத்தில், கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில், எவ்விதமான மாசுக்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இதனால் ஏராளமான கார்பன் துகள்கள் வளிமண்டலத்தில் வெளியேற்றப்படுகின்றன. இந்தத் துகள்களால், ஆலையைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
காற்றில் பரவும் கரித்துகள்கள், வீடுகள், வாகனங்கள், நீர்நிலைகள் என அனைத்து இடங்களிலும் படர்ந்து சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்திவருகிறது. இதுகுறித்து, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். இதனால், அப்பகுதிகளில் வசிக்கும் பெண்கள், குழந்தைகள், முதியோர் ஆகியோர் சுவாசப் பிரச்னைகளால் அவதிப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையும் படிங்க:கல்வராயன் மலையில் 3 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு!