ETV Bharat / state

மறைமலைநகரில் கூண்டு வைத்து அரியவகை ஆசிய மரநாயை வேட்டையாடிய நபர் கைது

செங்கல்பட்டு அருகே மறைமலைநகரில் கூண்டு வைத்து அரியவகை ஆசிய மரநாயை வேட்டையாடிய நபர் கைது செய்யப்பட்டார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 9, 2022, 10:57 AM IST

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் அடுத்த கூடலூர் வனப்பகுதியில் கூடுவாஞ்சேரி மாடம்பாக்கத்தைச் சேர்ந்த பிரபு(35), என்பவர் முயல் வேட்டைக்காக கூண்டு வைத்துள்ளார். கூண்டில் அரிய வகை ஆசிய மரநாய் சிக்கியுள்ளது.

அதனை எடுத்துக்கொண்டு செல்லும்போது, வனக்காவலர் பார்த்து அவரைப் பிடித்து விசாரித்ததில் வேட்டையாடியதை ஒப்புக்கொண்டதைத்தொடர்ந்து, அவரிடம் இருந்து மரநாய் பறிமுதல் செய்யப்பட்டது. அதனடிப்படையில் வன உயிரின பாதுகாப்புச்சட்டத்தின்படி அட்டவணை எண் 2, பகுதி 2-ல் இந்த உயிரினம் வருவதால் வழக்குப்பதிவு செய்த தாம்பரம் வனச்சரக அலுவலர் கைது செய்யப்பட்ட நபரை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வரும் 20ஆம் தேதி வரை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதன் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: ”நாய்க்கு வெறிபிடிச்சிடுச்சி” - ஹெச் ராஜாவின் ட்விட்டர் பதிவு குறித்து புகார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.