செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்குள்பட்ட சதுரங்கப்பட்டினம் காவல் நிலையம் மிகவும் பழுதடைந்த நிலையில் இயங்கி வந்தது. இதனைக் கருத்தில் கொண்ட அரசு, பூந்தண்டலம் கிராமத்தில் ரூ. 89.93 லட்சம் செலவில் புதிதாக காவல் நிலையத்தை கட்டி முடித்தது.
இந்தக் காவல் நிலையத்தை நேற்று காணொளி மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இதன்பின்பு, செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் காவல் நிலையத்தில் குத்துவிளக்கு ஏற்றி வைத்து, கட்டிடத்தில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் மற்றும் சுற்றுப்புறங்களைப் பார்வையிட்டார்.
மேலும், காவல் நிலைய நுழைவாயில் முன்பு மரக்கன்றுகளை நட்டார். இந்த விழாவில் காவல் துறை அதிகாரிகள், காவலர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: ‘போராட்டத்தைக் கண்டு அரசு அஞ்சுகிறது’ - வைகோ